காலியின் அஹங்கம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர்.
அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு இராணுவத்தினர் சைகை செய்த போதிலும் நிறுத்தாமல் சென்றதன் காரணமாகவே அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
மரணித்தவர்களின் சடலங்கள் மேலதிக விசாரணகளுக்காக தற்போதைக்கு காலி பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அதற்கிடையே அஹங்கமை பிரதேசவாசிகள் சம்பவம் காரணமாக கடும் சினமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸ் வண்டியொன்றையும் தாக்கித் தீ வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அஹங்கமை பிரதேசத்தில் தற்போது கடும் பதற்ற நிலை காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலி - காலியில் சம்பவம்