Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த அன் கோ வை பொதுமக்கள் ஒன்று திரண்டு மின்சாரக் கதிரைக்கு அனுப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கென நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த யுத்தத்துக்குத் தலைமை தாங்கிய தன்னால் மட்டுமே சர்வதேசத்தினால் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்தும் இலங்கையை மீட்டெடுக்க முடியும்.

மற்றபடி கார்ட் போர்ட் வீரர்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்களால் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டின் விசாரணையை எதிர்கொண்டிருந்த துமிந்த சில்வா போன்ற அயோக்கியர்களை சட்டத்தின் தண்டனையில் இருந்து விடுவிக்க மட்டும் தான் முடியும்.

ஆயினும் இந்தக் கார்ட்போர்ட் வீரர்களை பொதுமக்கள் மிக விரைவில் மின்சாரக் கதிரைக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த அன் கோ மின்சாரக் கதிரைக்கு அனுப்பப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com