Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரெஞ்சு பாராளுமன்ற முன்றலில் தமிழ் மக்களுகாக தன்னையே தியாகம் செய்த தியாகி கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை விட்டுசென்றுளான் இந்த தியாகத்தில் தமிழ் மக்களும் ஒரு செய்தியை விட்டு சென்றுள்ளான் தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையை, படங்களாகவும், காணொளிகளாகவும் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், இவற்றையெல்லாம் எப்படி அமைதியாக பார்த்து கொண்டிருகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டு, மனித நேயமே பொறுக்க முடியாத கொடுமையை பார்க்க வேண்டாம், தன் வாழ்வின் அர்பணிப்பில்லாவது, தமிழ் இனம் விழிப்பு அடையாதா என்ற ஆதங்கத்தில் தன்னையே தியாகம் செய்திருக்கிறான்.

முத்துக்குமார், முருகதாசன், ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி என்று எண்ணற்ற தமிழ் இளைஜர்கள் தமிழ் மக்கள் விடுதலை அடைய, தம்மையே தீ பந்தன்களாக மாற்றி கொண்டார்கள், இதன் மூலமாவது தமிழர்கள் தம்மை சுற்றியுள்ள அடிமை விலங்கை உடைத்து எழுந்து நிற்கமாற்றார்களா ?, இந்த வேள்வி மூலம் உலக தமிழர்கள் கிளர்ந்து எழ மாட்டார்களா ?, தமிழ் இனம் விடுதலை அடைய மாட்டாதா ? என்று எவர்கள் எல்லோரும் தம்மையே வேள்வி ஆக்கினார்கள்.சிங்களம் தமிழருக்கு எதிராகவோ, தமது தேசியத்திற்கு பாதகம் ஏற்பட்டாலோ, தமது வேற்றுமையை பார்க்காமல் ஒன்றாகி விடுவார்கள், ஆனால் நாம்?

வட ஆபிரிக்காவில் துனிசியா நாட்டில் ஒரு இளைஜன் தன்னையே பிழம்பாக்கி ஆரம்பித்து வைத்த வேள்வி தீ தான் இன்று எந்தனையோ இளைஜர்களை விளித்து எழ வைத்தது, இந்த இளைஜர்கள் Face Book மூலமாகவும், நவீன தொலைதொடர்புகள் மூலமாகவும் ஆரம்பித்த போராட்டம், 30-40 வருடங்களாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்து, இன்று பல அரேபியா நாடுகளின் மக்கள் போராட்டம் இந்த உலகத்தையே மாற்றிகொண்டிருகிறது.

இன்று நாம் வாழும் காலமும் நேரமும் 2 வருடங்களுக்கு முதல் நாம் எமது உறவுகளை பாதுகாக்க தெருவே வாழ்கையாக கொண்ட நேரம், எமது பல தாய் தமிழக சகோதர்களும், ஈழத் தமிழ் சகோதரரும் நெருப்பு வேள்வி நடத்திய காலம், எமது விடுதலை போராட்டத்தை அழிக்க 20க்கு மேற்பட்ட நாடுகள் கைகோத்து இருந்த நேரம், பள்ளிகூடங்கள், மருத்துவமனைகள் குண்டு மழைக்குள் சிக்கியிருந்த நேரம், இன்று அதே கால கட்டத்தில் எமது அழிவுக்கு ஒரு காரணமாக இருந்த ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவுக்கு எதிராக ஒரு போர் குற்ற பத்திரிகையை வெளியிட்டும், வெளியிடாமலும், சிறிலங்காவை பாதுகாக்க வேற்று வழி இருக்கிறதா, இல்லை இப்படியே காலத்தை புது கமிசன் வைத்து காலத்தை நீட்டலாமா என்று சிந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில், வெளி வந்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியை கண்டு, இந்த கால கட்டத்தில் விளித்து எழுங்கள் என்று தாய் தமிழருக்கும், உலகத்தில் பறந்து வாழும் தமிழ் மக்களையும் கிளர்ந்து எழுங்கள் என்று சொல்லி சென்றிருக்கிறான் இந்த சகோதரன்.

அன்பான தமிழ் இனமே, இவ்வாறு இன்னும் எத்தனை தமிழ் இளைஞர்களை நாம் இந்த வேள்விக்கு கொடுக்க போகின்றோம். இவர்கள் தான் எமது வருங்கால விடுதலை போரரட்ட வீரர்கள், இவர்களின் கல்வி, தமிழ் மொழி விடுதலை, தமிழர் உரிமை விடுதலைக்கான வேட்கை எமக்கு தேவை.ஆகவே இது நாம் கிளர்த்து எழ வேண்டிய நேரம்.எமது தாய் தமிழகத்து சகோதரர்களே இந்த வேள்வி போதும், நீங்கள் எல்லோரும் தமிழர்கள் விடுதலை அடைய முக்கிய பங்களிக்க வேண்டியவர்கள், தமிழர்கள் மேல் கட்டப்பட்டுள்ள சாதி, மதம், பணம் என்ற அடிமை சங்கிலியை உடைத்தெறிந்து நாம் எல்லோரும் தமிழர்கள், இந்த தமிழர்கள் விடுதலை அடைய, தமிழை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசியல் வாதிகளை தூக்கி எறிந்து, தமிழ் மக்கள் விடுதலை அடைய போராடுவோம், தமிழ் மண்ணைகாப்போம்.

சிறி லங்காவை எல்லோருமாக சேர்ந்து புறகணிப்போம், தமிழ் மக்களை காலம் காலமாக கொன்றொழித்த அணைத்து சிங்கள ஆட்சியாளர்களையும் நீதிக்கு முன் நிறுத்துவோம்.எம் மண்ணை மீட்கும் வரை ஓயமாட்டோம்.இது தான் முள்ளிவாய்காலின் கொன்று குவிக்கப்பட்ட, காணாமல் இன்னமும் நாம் தேடிகொண்டிருக்கும் 146,679 எமது சகோத சகோதரிகளுக்கும், கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், முருகதாசன் என்று எண்ணற்ற சகோதர்களுக்கு நாம் கொடுக்கும் அஞ்சலி.


0 Responses to பிரான்சில் தியாகி கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com