மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக மீனவர்கள் நான்குபேரை இலங்கை கடற்படையினர் சுட்டுகொன்றுள்ளனர். அவர்களின் உடல்களை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டியது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பா.ஜ., சார்பில் மே மாதம் கடல் முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இலங்கையில் தமிழர்கள் மீதான போரில், அந்நாட்டு அரசுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்டதாக ஐ.நா., விசாரணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. செய்த துரோகத்திற்கு இலங்கை அரசு மன்னிப்பு கோர வேண்டும். இனப்படுகொலையை சகிக்க முடியாமல், சங்கரன்கோவிலைச் சேர்ந்த பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொண்டார். எக்காரணத்திற்காகவும், யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றார்.



0 Responses to கடல் முற்றுகை போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்