பதிந்தவர்:
ஈழப்பிரியா
22 April 2011
சிங்கள அரசுக்கு எதிரான ஐ.
நா அறிக்கையின் எதிரொலியாக,
ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய கொடூரமான போர்க்குற்றங்களுக்கும்,
இனப்படுகொலைக்கும்,
துணை நின்ற இந்திய அரசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும்,
இலங்கை மீதான இந்திய வெளியுறவு கொள்கைகளை மாற்ற கோரியும்,
பன்னாட்டு விசாரணை குழு அமைக்க கோரியும்,
தமிழ்நாடு முழுவதும்,
அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் "
பெரியார் திராவிட கழகம்"
சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கரூரில்,
மாவட்ட பெரியார் திராவிட கழக தலைவர் திரு கு.
கி.
தனபால் தலைமையில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
ம.
தி.
மு.
க நகர செயலாளர் பாலமுருகன்,
ஈழபாரதி,
கல்யாணி பாஸ்கர்,
கரூர் தமிழர் முன்னணிஅதியமான்,
நல்லசிவம்,
முருகேசன்,
மற்றும் பெண்கள் முன்னணி,
ஆதி தமிழர் பேரவை,
உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும்,
தமிழ் உணர்வாளர்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.




0 Responses to சிங்கள, இந்திய அரசுகளுக்கு எதிராக பெரியார் திராவிட கழகம் நடத்திய எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)