இன்றும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக ஐநாவினால் வெளிப்படுத்தப்பட்டவுள்ள ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி, தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதோடு, செயற்திட்ட வரைவொன்றை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம், இந்த நிபுணர் குழு கையளிக்குமென போர்க்குற்றங்கள்-மானுடத்துக்கெதிரான குற்றங்கள்-இனப்படுகொலை தொடர்பிலான அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரவித்துள்ளார்.
ஐ.நா.வின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக, பதிலறிக்கையை தயார்படுத்துவதற்கு நிபுணர் குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ள நிலையில், அதற்கு சமாந்திரமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் நிபுணர் குழுவைவொன்றை நியமித்திருப்பதாக அமைச்சர் டிலக்சன் மொறிஸ் நாதம் ஊடகசேவைக்கு தெரிவித்தார்.
ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தனது நட்பு நாடுகள் ஊடாக ஆதரவினை திரட்டிவரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக்குழுவொன்றும் அனைத்துலக மட்டத்திலான சந்திப்புக்களை நடாத்தவுள்ளதாகவும் அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.
போர்குற்றம் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படுகொலை என்ன கருத்தினை அகைத்துல மட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய தகுந்த தருணமாக இது அமைந்துள்ளதெனவும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்



0 Responses to நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி தமிழீழ அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை