தமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை:சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பபிள்ளைபிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.
‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர்குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோது தம உயிரைப் பற்றி எண்ணாமல், தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு வந்தார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேடை மேடையாய் சென்று முழங்கினார். விளைவு:? பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
கனடாவில் சென்று முழங்கிய போது அனாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இனல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி, மதங்களை கடந்த இவர், “தமிழினத்து துரோகிகளை” வெளிச்சம் போட்டு காட்டினார். தன இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார். ” இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க, தமிழகத்தில் ஒரு கட்சி இருந்திருந்தால், தமிழினப்படுகொலையையும்,தடுத்திருக்கலாம்! தமிழீழமும் மலர்ந்திருக்கும்! என்றெண்ணி, தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில், புலிக்கொடியேந்தி, “நாம் தமிழர்” கட்சியை துவங்கினார்.
“இருப்பாய் தமிழா! நெருப்பாய்!!” என தமிழர்களை தட்டி எழுப்பினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை நிர்வாணப்படுத்தி, உடைமைகளை சேதப்படுத்தி, அடித்து உதைத்து,சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களன். சில மாதங்களுக்கு முன்பு கூட, வேதாரணியத்தில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டார். “என் சகோதரனை எப்படிடா அடிப்பாய்….? என் தமிழ்ச் சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே…? இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் =, சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்….? ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ தவறாக பயன்படுத்தப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு. இந்த சட்டத்தை ரத்து செய்து வெளியே வந்தார்.
இன்று, ‘ தமிழின துரோகி’ காங்கிரசை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறார். இவரை கொள்ள சதி திட்டம் தீட்டுவதாகவும் செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவந்து கொடிருக்கிறது.பலரும் இவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அன்று,இந்திய தேசிய விடுதலைக்காக சுபாஷ் சந்திர போஸ் ,ஹிட்லரிடம் உதவி கேட்டாரே ஏன்….? வழி முரண்பாடாக இருந்தாலும், நோக்கம் புனிதமானது. அது போல தான், காங்கிரசை ஒழிக்க, தற்போது அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டிய இக்கட்டான, இழிவான நிலையில் உள்ளோம் என்பதால் இவர், அ.தி.மு.க வை ஆதரிக்கிறார்.மற்றபடி, பணம், பதவி, புகழ்,இவற்றிற்கு எல்லாம் மயங்குகிற ஆள், இவர் இல்லை. பணத்தை எதிர்பார்த்து சம்பாதித்து இருக்கலாம்.” வருமானத்தை விட இனமானமே” பெரிது என அதனை விடுத்து இனத்திற்காக போராட வந்துள்ளார் .ஏன் என்றால்………….? இவர்……! பிரபாகரனின் தம்பி………..!!!!!




இளமாறன் இந்தியா
தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும், ஆமாம் ஆனால் யார் பின்னால் அணி வகுப்பது, யார் உண்மையான தலைவர், சுயநலமில்லா தலைவர், வைகோ ஜெயா பின் இருந்தார், நெடுமாறன் அவர்களுக்கு கருணாநிதியை குறை சொல்லவே நேரம் சரியாக இருக்கும். சரி, ஜெகத் கஸ்பரும், சீமானும் சேர்ந்து இயக்கம் தொடங்கினார்கள், ஆனால் முன்னவர் மிதவாதி, பின்னவர் தீவிரவாதி (பேச்சில் தான்), நம்பிக்கையுடன் இருந்தோம், இருவரும் பிரிந்தனர். பின்பு, ஜெகத் திமுகாவின் ஆதரவாளர் என்று குற்றச்சாட்டு. சரி சீமான் பின்னால் கல்லூரி மாணவர்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்கள், மற்றும் பொது மக்கள் (ஈழ அனுதாபிகள்) அணி திரள்வர், திரளலாம் என்று இருந்த வேளையில், சீமானிடம் பல சறுக்கல், தனித்து தேர்தலை சந்திக்க இருந்தார், பின்பு அதிமுகாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பதாக முடிவு, அதன் பிறகு 2011 தேர்தலை சந்திப்பதில்லை என்ற முடிவு, பிறகு காங்கிரேஸ் எதிர்ப்பு, எப்படி இவரை நம்பி இவர் பின்னே மற்றவர்கள் (இவர் கட்சியினியரை தவிர) அணி வகுப்பர். கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் உயிர்யிழப்பு, கட்சி சார்பாற்ற அமைப்பு தமிழகத்தில் இல்லாது வெற்றிடம் இருப்பதால் தான். மேலும், சீமான் பின் அணி வகுத்தால், அவர்களை நான் கொன்று விடுவேன்,வெட்டி விடுவேன் என்று உணர்ச்சி வயப்பட்டு பேசி விடுவார், அதனால் நாமும் சிறைக்கு போக வேண்டி இருக்கும் என்று அஞ்சுபவர்கள் பலர். சும்மா உண்ர்ச்சி வயப்பட்டு பேசி விடுவதில் பலன் ஏதும் இல்லை. அமேரிக்காவை நம்பியதில் மோசம் போனோம், தற்போது சிறிது சிறிதாக செய்தி வருகிறது இந்தியாவை விட அமேரிக்காவே இலங்கைக்கு உதவியது என்று, ஆதலார், யாரையும் எதிர்பதில் பயன் ஏதுமில்லை. எவ்வாரயினும், இந்தியா வின் உதவி இல்லாமல் இல்லாமல் தமிழ் ஈழம் பெற முடியாது, குறைந்தது உலகின் சில நாடுகள் தென் சூடான் போன்ற தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது இந்தியா ஆதரவு வழங்காமல் இருந்தாலும், எதிர்க்காமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக இந்தியாவை ஆள போவது காங்கிரேஸ்/பிஜேபியாக இருக்கும், இவர்களை ஆதாரிக்கும் கட்சியாக திமுக/அதிமுக இருக்கும், ஆகவே, இக் கட்சிகளின் ஆதரவு அவசியம். மேலும், திரு சீமான் எந்த கட்சியையும் எதிர்க்காமல், யாரையும் தூற்றாமல் ஈழ ஆதரவு மட்டுமே தனது மூச்சு என்று பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இவர்களிடையே தனது கொள்கையை பரப்ப வேண்டும். பின்பு, நியாயமாக, நேர்மையாக, தமிழக மக்கள் பிரச்சனையில் ஜனநாயக முறையில் ஆட்சியார்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் (திமுகாவோ/அதிமுகாவோ). தற்போது கூட இந்திய அரசை எதிர்க்காமல் போர் குற்றவாளியான இலங்கையை ஆதரிக்க கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். பெரிய அளவில் சுத்தமான ஜனநாயக வழி போராட்டம் நடத்த வேண்டும். ஏற்கனவே சீனா போன்ற நாடுகள் இலங்கை பக்கம், தற்போது ஐ.நா வின் அறிக்கைக்கு ரஷியாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பல நாடுகளின் ஆதரவையும் நாடி வருகிறது இலங்கை. உடனடி அவசியம் பெரிய போராட்டம், வெறும் அறிக்கை விடுவதி்லோ அல்லது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் (சிறிதளவு)நடத்தும் போராட்டம் போதாது. கொரில்லா போராட்டம்/ ஆயுத போரட்டத்திற்க்கு சில ஆயிரம் தொண்டர்கள் போதும். ஆனால் ஜனநாயக வழி போரட்டத்திற்க்கு பெரும் கூட்டம் அவசியம், எகி்ப்த், தென் சூடான்,லெபனானை போல் பெரும் கூட்டம் அவசியம். இதன்படி அவர் நடந்தால் , சீமான் தலைமை ஏற்போம்.