தாய் தமிழகத்தில் தமிழருக்கு நடக்கும் கொடுமைகளை வெறும் பார்வையாளராக பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தன் இன்னுயிரை தியாகம் செய்த கிருஷ்ணமூர்த்திக்கு புலம்பெயர் அமைப்புக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.இன்று ஐக்கிய நாடுகளின் புலன் விசாரணைகுழு சிறி லங்கா இராணுவத்திற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் எதிராக அறிக்கையை விட்டிருக்கும் நிலையில் உலகம் முழுதும் இருக்கும் தமிழர்கள் இனி நாம் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.
கிருஷ்ணாமூர்த்தி தியாகத்திற்கு நாம் தலை வணங்கும் இந்நேரத்தில் தமிழரின் விடுதலைக்கு முக்கிய முக்கியமானவர்கள் இளம் சமுதாயத்தினர்.
தமிழ் மக்கள் விடுதலை அடைய வேண்டும், தமிழருக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை, மீண்டும் ஒரு சமுதாய புரட்சி உருவாக வேண்டும். தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும். இந்த விடுதலை போராட்டத்திற்கு கிருஷ்ணாமூர்த்தி போன்ற இளைஞர்கள் தேவை.
உங்கள் உயிர் தியாகங்களுக்கு முன் நாம் தலை வணங்கும் நேரத்தில் உலக தமிழ் அனைவரையும் விடுதலைக்க எல்லோரும் கிளர்ந்து எழுங்கள், தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை தூக்கி எறிந்து சிறந்த ஒரு வருங்கால விடுதலை அடைந்த இனமாக தமிழரை மாற்றுங்கள்.
தமது இன்னுயிரை தியாகம் செய்த இவர்களுக்கு நாம் அளிக்கும் வீர வணக்கம் இதுதான்.
நாளை ஏப்ரல் 20 புதன்கிழமை மாலை 15:30க்கு பிரெஞ்சு பாராளுமன்ற முன்றலில் தியாகி கிருஷ்ணாமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தப்படும்.
Metro : Assemblée Nationale (ligne 12) invalides (ligne 8-13)
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அர்ப்பணிப்பு என்றும் அழியாச் சுடர்விளக்காய் எரிந்து நிற்கும் . தியாகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு யேர்மன் அனைத்து தமிழ் மக்களின் சார்பில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை தலை குனிந்து வீர வணக்கம் செலுத்துகிறோம்.
சிறீலங்காவில் ஈழத் தமிழர்கள் இன்றும் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் அடுக்குமுறைக்குள் சிக்கி தவித்துக் கொண்டு இருப்பதை கண்டித்து தீக்குளித்த தியாகி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தார் அனைவரின் துயரிலும் நாம் பங்கு கொள்கிறோம்.
யேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை
தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை வெளி வந்துள்ள வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தில் இளம் பொறியியலாளரான கிருஷ்ண மூர்த்தி என்ற இளைஞர் தனக்குத் தானே தீ மூட்டி தீக்குளித்துள்ளார். அவரது உணர்வு பூர்வமான இத்தியாக நிகழ்வானது எம்மை அதிர்ச்சிக்கும், ஆறாத் துயருக்கும் ஆளாக்கி உள்ளது. விலை மதிப்பற்ற உயிரை அவர் தியாகம் செய்துள்ளமை எம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவரது இன உணர்வினை நாம் மெச்சும் அதேவேளையில் இது போன்று தமிழ் நாட்டில் இன்னுமொரு உயிர்ப்பலி ஏற்படக் கூடாது. இதுவே இறுதி உயிர்ப்பலியாக இருக்கட்டும்.
மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும், இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவக் கூடாது இவற்றை க் கண்டிப்பதற்காகவே நான் தீக்குளிக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தீக்குளித் துள்ளார்.
இத்தகைய இன உணர்வுள்ள இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் இதயத்தை ஈட்டிபோல் தைக்கும் இன்னுயிர் தியாகத்தைக் கைவிட்டு தமிழினத்தின் நலனுக்காகப் பாடுபடும் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும் என கனடாவிலுள்ள தமிழர் பேரவை அறிக்கை விடுத்துள்ளது.
கனடியத் தமிழர் பேரவை ஊடக அறிக்கை
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு தியாகம்
சிறிலங்கா மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவை வெளிவிட்ட அறிக்கையைப் படித்து அவ்வேதனையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவொருவர் தன்னுயிரையே ஈகம் செய்துள்ளார்.
உறவுகளுக்காக தன்னுயிரை ஈகம் செய்த இளம் பொறியியலாளர் கிருஸ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களுக்கான எமது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் தமிழின அழிப்பைப் பொறுக்க முடியாது போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் மீண்டும் ஒரு தமிழன் தனது இன்னுயிரைத் தீயிட்டு ஈகம் செய்துள்ளமை ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்கான பாதையில் எமது தமிழ்நாட்டு உறவுகளின் செயற்பாடுகள் மங்கி விடவில்லை என்பதையே பறைசாற்றி நிற்கின்றது.
இந்திய அரசானது மீண்டும் மீண்டும் ஈழத் தமிழினத்திற்கான தனது துரோகத் தன்மையை செய்யாமல் அவர்களுக்கான தீர்வை சிறந்த முறையில் தீர்த்து வைப்பதில் இனியும் தயங்குமேயானால் இப்படியான சம்பவங்கள் நடந்துகொண்டுகொண்டே இருக்குமென்பதைக் கிருஸ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்கள் தியாகம் கூறிநிற்கின்றது. எனவே சிங்களப் பேரினவாத அரசு, 200.000க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்து கொலைத் தாண்டவம் ஆடியது மட்டுமல்லாமல் இன்று எமது தமிழ் நாட்டு உறவுகளையும் தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றமையும், தொடருகின்ற தமிழினப் படுகொலைகளிற்கான உயிர்த் தியாகங்களையும் இந்தியா மற்றும் அனைத்துலக நாடுகள் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்காமல் அவற்றை உடன் நிறுத்தி சிறீலங்கா அரசைத் தண்டிக்கும்
அதேவேளை தமிழினத்தைப் பாதுகாப்பதற்குரிய வழிவகைகளைச் செய்ய வேண்டுமென உலகத் தமிழினம் வேண்டி நிற்கின்றது.
டென்மார்க் தமிழர் பேரவை



0 Responses to கிருஷ்ணமூர்த்தி தியாகத்திற்கு தலை வணங்கும் புலம்பெயர் அமைப்புக்கள்