பிரித்தானியாவில் ஒரே நாளில் பல நகரங்களில் இடம்பெற்ற தியாகத்தாய் அன்னை பூபதி நினைவுவணக்க நிகழ்வு!.பிரித்தானியாவில் முதன்முறையாக ஒரே நாளில் பல நகரங்களில் இடம்பெற்ற தியாகத்தாய் அன்னை பூபதி, மற்றும் தியாகி கிருஷ்ணகுமார் ஆகியோரின் நினைவுவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கொவென்றி, மில்ரன் கீன்ஸ், ரூட்டிங், வெம்பிலி, ஹறோ ஆகிய நகரங்களிலேயே ஒரே நாளில் சிறப்பாக இந்த நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
மில்ரன் கீன்ஸ் பகுதியின் நிகழ்வு:
நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை மில்ரன் கீன்ஸ் பகுதியில் Stantonbury compus என்ற மண்டபத்தில் பி.ப.7 மணியளவில் அண்னைபூபதி மற்றும் தியாகி கிருஷ்ணகுமார் ஆகியோரின் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 1998 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் ஆஷா அவர்களின் சகோதரி திருமதி சிவாஜினி சிவரஞ்சன் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் வீரச்சாவடைந்த லெப். கேணல் இசைஞானியின் சித்தப்பா திரு. தயாபரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர்மாலை அணிவிப்பை தொடர்ந்து மக்களின் மலர்வணக்கம் இடம்பெற்றது.
கொவென்றி பகுதியின் நிகழ்வு:
கொவென்றியில் உள்ள 103 liecester causeway எனும் முகவரியில் அமைந்துள்ள Ukranian hall மண்டபத்தில் நடைபெற்ற அண்னைபூபதி மற்றும் தியாகி கிருஷ்ணகுமார் ஆகியோருக்கான அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரை 2.04.1992 காலப்பகுதியில் பம்பைமடுப்பகுதியில் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சவடைந்த வீரவேங்கை விக்ரர் அவர்களின் சகோதரர் சதீஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் தேசிய உணர்வாளர் ரிச்சட் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர்மாலையினை தேசிய உணர்வாளர் திருமதி வதனா செல்வரட்ணம் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து மக்களின் மலர்வணக்கமும், நினைவுரைகளும் இடம்பெற்றன.
ரூட்டிங் பகுதியின் நிகழ்வு:
ரூட்டிங் பகுதியில் உள்ள 180 - 186 UPPER TOOTING ROAD, LONDON - SW17 7EJ எனும் முகவரியில் அமைந்துள்ள SIVAYOGAM ஆலயத்தில் நடைபெற்ற அண்னைபூபதி மற்றும் தியாகி கிருஷ்ணகுமார் ஆகியோருக்கான நினைவுவணக்க நிகழ்வு இடம்பெற்றது.
ரூட்டிங் சிவயோகம் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து பெருந்திரளான மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
இதே போல் ஹறோ பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்திலும், வெம்பிலி நடேசர் ஆலயத்திலும் நடைபெற்ற அண்னைபூபதி மற்றும் தியாகி கிருஷ்ணகுமார் ஆகியோருக்கான நினைவுவணக்க நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் பங்குகொண்டதை காணக்கூடியதாக இருந்தது.











0 Responses to பிரித்தானியாவில் ஒரே நாளில் பல நகரங்களில் இடம்பெற்ற அன்னை பூபதி நினைவுவணக்க நிகழ்வு! (படங்கள் இணைப்பு)