Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கதிர்காமத்தில் குளித்து கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி காணாமல்போன சடலம் இன்று காலை மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் மகா வித்தியாலய உயர்தர பாடசாலையிலிருந்து 96 மாணவர்களும் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்களும் நான்கு நாள் கல்விச்சுற்றுலாவை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை காலை பயணத்தை ஆரம்பித்தனர்.

இவர்கள் நேற்று மாலை செல்லக்கதிர்காமம் வாவியில் குளித்துக்கொண்டிருந்தபோது நான்கு மாணவர்கள் நீரினால் அடித்துச்செல்லப்பட்டனர்.

இவர்களில் மூவர் காப்பாற்றப்பட்ட போதிலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அதிபர் ரி.கோபாலபிள்ளை தெரிவித்தார்.

நீரினால் அடித்துச்செல்லப்பட்ட மாணவன் இம்முறை .பொ. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் சபாரத்தினம் யுகன் எனவும் அதிபர் தெரிவித்தார்.

இந்தநிலையில் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் கதிர்காமம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது மரண விசாரணை நடைபெறுவதுடன், விசாரணை முடிந்தவுடன் சடலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்படுமெனவும் மட்டக்களப்பு வவுணதீவு நாமகள் மகா வித்தியாலய அதிபர் அதிபர் ரி.கோபாலப்பிள்ளை தெரிவித்தார்.

0 Responses to கதிர்காமத்து வாவியில் மாணவன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு (காணொளி)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com