நிபுணர் குழு அறிக்கையின் மூலம் இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கப்பட முடியாது என சிரேஸ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை ஒரு தலைப்பட்சமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இலங்கை நீதிமன்றத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடனோ அல்லது பாதுகாப்புப் படையினருடனோ பேச்சுவார்த்தை நடாத்தாது பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் இலங்கைப் படையினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை எனவும் நியாயமான முறையில் போர் நடைபெற்றதாகவும் தெரிவிப்பது மிகவும் சுலபமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.



0 Responses to நிபுணர் குழு அறிக்கையின் மூலம் தண்டனை வழங்கப்பட முடியாது