நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி என்ற நம் தமிழ் உறவு ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையை கண்டு மனம் பொறுக்காமலும், தமிழர்கள் இன்னும் அங்கு படும் இன்னல் கண்டு நேற்று அதிகாலை 5 மணி அளவில் 3 லிட்டர் பெட்ரோலை தன் மீது ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு தன் இன்னுயிரைப் போக்கிக் கொண்டார் என்னும் துயரச் செய்தி என் நெஞ்சில் இடியாய்த் தாக்கியது. அவருக்கு நாம் தமிழர் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணில் இன்னும் இனமானம் அற்றுப் போய் விடவில்லை அது இன்னும் நீறு பூத்த பெரு நெருப்பாக அனைவரின் நெஞ்சிலும் இருக்கிறது என்று அப்துல்ரவூப் தொடங்கி, முத்துக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட இப்பொழுது தன் இன்னுயிர் துறந்த கிருட்டிணமூர்த்தி போன்ற எத்தனையோ மானமுள்ள மறத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இந்தச் சமூகத்தின் செவிட்டுக்காதில் மட்டும் எம் தமிழ்ச் சொந்தங்களின் கூக்குரலும் அவர்கள் படும் துயரமும் இன்னம் விழவில்லை. இனம் வீழ்ந்தது அழுவதற்கு அல்ல, மீண்டும் எழுவதற்கு என்றும் அதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை என்பதால் உயிரைக் போக்கிக் கொள்வது போன்ற அளப்பரிய தியாகச் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் எம் சொந்தங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதே சமயத்தில் லட்சிய உறுதி கொண்ட கிருஷ்ண மூர்த்தி போன்ற மறத்தமிழர்கள் எதற்காக தம் இன்னுயிரை இழந்தார்களோ அந்த லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதே சமயத்தில் இனியொரு கிருஷ்ண மூர்த்தி தோன்றாமல் இருப்பது, நமது கையில்தான் இருக்கிறது.
தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் போராட்டப் பாதையை நாம் தொடர வேண்டும். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



இளமாறன் இந்தியா
தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும், ஆமாம் ஆனால் யார் பின்னால் அணி வகுப்பது, யார் உண்மையான தலைவர், சுயநலமில்லா தலைவர், வைகோ ஜெயா பின் இருந்தார், நெடுமாறன் அவர்களுக்கு கருணாநிதியை குறை சொல்லவே நேரம் சரியாக இருக்கும். சரி, ஜெகத் கஸ்பரும், சீமானும் சேர்ந்து இயக்கம் தொடங்கினார்கள், ஆனால் முன்னவர் மிதவாதி, பின்னவர் தீவிரவாதி (பேச்சில் தான்), நம்பிக்கையுடன் இருந்தோம், இருவரும் பிரிந்தனர். பின்பு, ஜெகத் திமுகாவின் ஆதரவாளர் என்று குற்றச்சாட்டு. சரி சீமான் பின்னால் கல்லூரி மாணவர்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்கள், மற்றும் பொது மக்கள் (ஈழ அனுதாபிகள்) அணி திரள்வர், திரளலாம் என்று இருந்த வேளையில், சீமானிடம் பல சறுக்கல், தனித்து தேர்தலை சந்திக்க இருந்தார், பின்பு அதிமுகாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பதாக முடிவு, அதன் பிறகு 2011 தேர்தலை சந்திப்பதில்லை என்ற முடிவு, பிறகு காங்கிரேஸ் எதிர்ப்பு, எப்படி இவரை நம்பி இவர் பின்னே மற்றவர்கள் (இவர் கட்சியினியரை தவிர) அணி வகுப்பர். கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் உயிர்யிழப்பு, கட்சி சார்பாற்ற அமைப்பு தமிழகத்தில் இல்லாது வெற்றிடம் இருப்பதால் தான். மேலும், சீமான் பின் அணி வகுத்தால், அவர்களை நான் கொன்று விடுவேன்,வெட்டி விடுவேன் என்று உணர்ச்சி வயப்பட்டு பேசி விடுவார், அதனால் நாமும் சிறைக்கு போக வேண்டி இருக்கும் என்று அஞ்சுபவர்கள் பலர். சும்மா உண்ர்ச்சி வயப்பட்டு பேசி விடுவதில் பலன் ஏதும் இல்லை. அமேரிக்காவை நம்பியதில் மோசம் போனோம், தற்போது சிறிது சிறிதாக செய்தி வருகிறது இந்தியாவை விட அமேரிக்காவே இலங்கைக்கு உதவியது என்று, ஆதலார், யாரையும் எதிர்பதில் பயன் ஏதுமில்லை. எவ்வாரயினும், இந்தியா வின் உதவி இல்லாமல் இல்லாமல் தமிழ் ஈழம் பெற முடியாது, குறைந்தது உலகின் சில நாடுகள் தென் சூடான் போன்ற தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது இந்தியா ஆதரவு வழங்காமல் இருந்தாலும், எதிர்க்காமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக இந்தியாவை ஆள போவது காங்கிரேஸ்/பிஜேபியாக இருக்கும், இவர்களை ஆதாரிக்கும் கட்சியாக திமுக/அதிமுக இருக்கும், ஆகவே, இக் கட்சிகளின் ஆதரவு அவசியம். மேலும், திரு சீமான் எந்த கட்சியையும் எதிர்க்காமல், யாரையும் தூற்றாமல் ஈழ ஆதரவு மட்டுமே தனது மூச்சு என்று பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இவர்களிடையே தனது கொள்கையை பரப்ப வேண்டும். பின்பு, நியாயமாக, நேர்மையாக, தமிழக மக்கள் பிரச்சனையில் ஜனநாயக முறையில் ஆட்சியார்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் (திமுகாவோ/அதிமுகாவோ). தற்போது கூட இந்திய அரசை எதிர்க்காமல் போர் குற்றவாளியான இலங்கையை ஆதரிக்க கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். பெரிய அளவில் சுத்தமான ஜனநாயக வழி போராட்டம் நடத்த வேண்டும். ஏற்கனவே சீனா போன்ற நாடுகள் இலங்கை பக்கம், தற்போது ஐ.நா வின் அறிக்கைக்கு ரஷியாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பல நாடுகளின் ஆதரவையும் நாடி வருகிறது இலங்கை. உடனடி அவசியம் பெரிய போராட்டம், வெறும் அறிக்கை விடுவதி்லோ அல்லது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் (சிறிதளவு)நடத்தும் போராட்டம் போதாது. கொரில்லா போராட்டம்/ ஆயுத போரட்டத்திற்க்கு சில ஆயிரம் தொண்டர்கள் போதும். ஆனால் ஜனநாயக வழி போரட்டத்திற்க்கு பெரும் கூட்டம் அவசியம், எகி்ப்த், தென் சூடான்,லெபனானை போல் பெரும் கூட்டம் அவசியம்