Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் வீடியோ பொய்யானது என்று இலங்கை திரும்பத் திரும்பக் கூறிவருகிறது. இதையே வெளிநாட்டுத் தூதரகங்களில், குறிப்பாக ஐயோப்பிய நாடுகளில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களும் அந்தந்த நாட்டுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கோத்தபாய பணித்துள்ளார். அதோடு அந்த வீடியோவிலுள்ள பின்னணி இலங்கை இல்லை என்றும், அதில் சுட்டுக் கொல்லப்படுபவர்கள் புலிகள் இல்லை என்றும் அந்தந்த நாடுகளை நம்ப வைக்க வேண்டியது பாதுகாப்பு ஆலோசகர்களின் கடமையாகியுள்ளதால், அவர்களுக்கு இதுபெரும் சோதனையாக அமைந்துள்ளதாம்.

இதற்கமைய, இப்போது அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும், 8வது அதிரடிப்படைப் பிரிவின் தளபதியாகவிருந்த பிரிகேடியர் ரவிப்பிரிய அமெரிக்கா அதிகாரிகளுக்கும், 55, 59வது பிரிவுகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானிய அதிகாரிகளிடமும், 57வது பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், ஜேர்மனி மற்றும் சுவிஸ் அதிகாரிகளிடமும் இந்த விளக்கங்களைக் கொடுத்துள்ளனர்.

இவர்களோடு இன்னொரு முக்கிய இராணுவக் கட்டளைத் தளபதியாக இருந்து இப்போது நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் வெளிநாடுகளுக்கு விளக்கமளித்துள்ளாராம். இந்தியாவில் பயிற்சி பெறும் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும், தம்மிடம் கேள்வி கேட்கும் இந்திய இராணுவத்தினருக்கு கோத்தபாய சொல்லிக் கொடுத்ததையே பதிலாக அளித்து வருகிறார்.

இந்த வீடியோ கைதேர்ந்த நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்த கோத்தபாய, கேணல் ரமேஷின் கொலையை நியாயப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ரமேஷ் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்தபோது பல கொலைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்றுள்ளார் கோத்தபாய.

கோத்தபாய இவ்வாறு ரமேஷ் கொலையை நியாயப்படுத்தி அவ்வீடியோ உண்மையானது என ஒத்துக்கொள்வதால், வெளிநாடுகளில் அந்தந்த நாட்டாரிடம் கஷ்டப்பட்டு பொய்கூறும் பாதுகாப்பு ஆலோசகர்களுக்குத் தான் பாதிப்பு என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிர்வு

0 Responses to சனல் 4 வீடியோவை போலியானது என பரப்புரைசெய்க: கோத்தா உத்தரவால் திண்டாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com