நீண்ட கால இடைவெளியின் பின் ஏ தரச் சான்றிதழுடன் எதுவித காட்சி அழிப்புமின்றி லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்படத்தினை வெளியிட இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையையும், இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படும் மீனவர்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிணக்குகள் ஏற்படக்கூடும் என பிரதேச சென்ஸார் குழு காரணம் வெளியிட்டது.
இதையடுத்து லீனா மணிமேகலை புதுடெல்லியில் உள்ள திரைப்பட சான்றிதழ் தீர்ப்பாயத்தில் தடைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து திரைப்படத்தினை இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் சபையினை பரிசோதிக்குமாறு தீர்பாயம் உத்தரவிட்டது.
திரைப்படத்தை பரிசோதித்த இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் சபை திரைப்படம் ஏ தரச் சான்றிதழின் கீழ் வெளியிடப்படக் கூடியது எனத் தெரிவித்துள்ளது.
கலைஞர்களின் சுதந்திரத்துக்கு இவ்வெற்றி ஒரு எடுத்துக் காட்டு என லீலா மணிமேகலை கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வரின் ஆட்சியிலேயே இப்படம் வெளியில் வருவதற்கு பெரும் இழுபறிநிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to செங்கடல் திரைப்படத்துக்கு ஏ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது!