Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஜூன் 14ஆம் நாள் வெளியிட்டிருந்த ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற காணொளிப் பதிவு நியூயோர்க்கிலும் (21-06-2011) காண்பிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்திலுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் அலுவலகத்தில் திரையிடப்பட்ட இன அழிப்பின் காணொளிக் காட்சிப் பதிவை, அந்த இன அழிப்பில் பங்குகொண்ட போர்க்குற்ற நபர்களான முன்னாள் படைத் தளபதியும், ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹொன ஆகியோரும் பார்த்திருக்கின்றனர்.

இவர்களுடன் சென்றிருந்த சிறீலங்கா தூதரக அதிகாரிகள் 15 பேரும் இந்தக் காணொளிப் பதிவைப் பார்த்திருப்பதாக, அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தலைமை அதிகாரி ஜோஸ் லூயிஸ் டயஸ் (José Luis Díaz) எழுதியிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போரில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், மேலும் பல இலட்சக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தும் இருப்பதாகத் தெரிவிக்கும் லூயிஸ், இரண்டாவது பதவிக் காலத்திற்கும் தெரிவாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூன், நிபுணர் குழு கையளித்த அறிக்கையின் மீது அமர்ந்திருப்பதை நிறுத்திவிட்டு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்தவும், அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தவும், ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.


இந்த காணொளிப் பதிவை ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத்திலுள்ள அனைத்துலக மன்னிப்பு சபையின் அலுவலகத்தில் காட்சிப்படுத்திய அதேவேளை ஐ.நா ஊடக கட்டிடத்திலும் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், ஐ.நா செயளரின் இரண்டாவது பதவிக் காலம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றதால் இந்த நடவெடிக்கை ஒத்தி வைக்கபட்டது.

0 Responses to நியூயோர்க்கில் சவேந்திர சில்வா, பாலித ஹோகொனவும் பார்வையிட்ட "இலங்கையின் படுகொலைக்களம்"

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com