Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம் சென்னையில் உள்ள ம.தி.மு.க பல்கலைக்கழக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழின படுகொலையினை மேற்கொண்ட றாஜபக்ச அரசிற்கு வல்லரசு நாடுகள் ஆயுதங்கள் வழங்கி துணைபோனது ஆனால் தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முனவராதது வேதனை அளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தை வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகம் தட்டி எழுப்பும் என்றும் வேலுநாச்சியார் நடகம் தொடர்பான நிகழ்வுஒன்றில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1 Response to தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முன்வராதது வேதனை அளிக்கிறது: வைகோ

  1. ஐயா வெளிநாடுகளைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து உங்கள் நாடு என்ன செய்தது என்பதை கவனியுங்கள். இனவழிப்பு நடைபெற்ற போது தமிழகம் என்ன செய்தது? விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உணவாளர்களின் உயிர்தியாகத்தின் மேல் நின்று தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள் அரசியல் வியாபாரம் பேசியதை என்னவென்று சொல்வது? உலக நாடுகளை விடுத்து நீங்கள் தமிழக மக்கள் அரசில் வாதிகள் எம் அவலத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? துணிந்து உங்கள் பங்களிப்பினை உங்கள் கரங்களையும் எங்களை நோக்கி நீட்டுங்கள் நாம் எழுந்து வருவோம். உலகத்தைப் பற்றி கவலை எமக்கில்லை.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com