ஜெனீவா, மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற முயற்சிக்கப்படும் தீர்மானமானது ஒரு தலைப்பட்சமானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக இந்தியா ஆதரவளித்தால் பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீர்மானத்திற்கு ஆதரவளித்தால், காஷ்மீர், மனிப்பூர் போன்ற பிரச்சினைகளில் இந்தியா நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மேற்குலக நாடுகளுடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதனையே இந்தியா வலியுறுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் மெய்யான அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்திய அரசாங்கம் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் ஒரு பக்கச்சார்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழக மாநிலத்தின் பிரதான கட்சிகளாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக இந்தியா ஆதரவளித்தால் பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்
பதிந்தவர்:
தம்பியன்
11 March 2012
0 Responses to இலங்கைக்கு எதிராக இந்தியா ஆதரவளித்தால் பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்