ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கைக்கு மலேசியா ஆதரவு வழங்குகிறது. தமிழர்கள் மொழி, மத அடையாளங்களுடன் மலேசியாவின் வளர்ச்சிக்கு உதவும் சிறப்புடன் வாழும் இந்த நாடு இலங்கைக்கு ஆதரவு வழங்குவதை ஏற்கமுடியவில்லை.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மஇகா என்ற மலேசிய இந்திய காங்கிரஸ் ஆளுங் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வருடம் மலேசியத் தலைநகர் கோலா லம்பூர், தமிழ் நாடு தலைநகர் சென்னை ஆகியன சகோதர நகரங்களாகப் (Sister Citie) பிணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாடு மாநில உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மலேசிய அரசு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தமிழர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.
புறோகம் (Proham) என்ற மனித உரிமைகளை மேம்படுத்தும் மலேசிய அமைப்பு (Persatuan Promosi Hak Asasi Manusia) இந்த விடயத்தில் தீவிர கவனஞ் செலுத்துகிறது. மலேசியாவின் முன்னணிக் கல்விமான்களும் தொழிலளிதபர்களும் இந்த அமைப்பின் பின்னணியில் செயற்படுகின்றனர்.
மலேசியாவின் மூன்று தமிழ் நாளேடுகளும் இரண்டு ஆங்கிலப் பத்தரிகைகளும் இது தொடர்பான முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளன. மலே மொழி, சீன மொழிப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
காசாவில் (Gaza) இஸ்ரேலியப் முப்படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட மக்களுக்கு அண்மையில் மலேசியாவின் தொண்டர்கள் கப்பல் மூலம் நிவாரண உதவிகளை எடுத்துச் சென்றனர். இஸ்ரேயில் கடற்படையினர் சூடு நடத்தி இந்த மனித நேயப் பணியைத் தடுத்துள்ளனர்.
இஸ்ரேயில் நாட்டுடன் நெருக்கமான படைத்துறை உறவுகளைப் பேணும் இலங்கைக்கு வழங்கும் ஆதரவை மீளப்பெற வேண்டும் என்று மலேசியாவின் முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.



மலேசியாவில் உள்ள தமிழர்கள் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசகதால் தொட்டே வேலைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் அதே போன்று இலங்கைக்கும் இந்தியவில் இருந்து தொட்டே வேலைக்க அழைத்து செல்லப்பட்டவர்கள் இவர்கள் தான் மலையக தமிழர்கள் அனல் மலையக தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் பிரஜா உரிமை பிரித்த போழ்து இலங்கை அரசாங்க தோடு சேர்த்து பூர்விக தமிழர்கள் மலையக தமிழர்களுக்கு வைத்த
அப்பு உலகம் எங்கும் உள்ள இந்திய வம்ச வழி தமிழர்களுக்கு நன்கு தெரிவும்
1946 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத் தொகையில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 10.9 வீதமாகவே இருந்தது அதேவேளை பெரும்பான்மை தமிழர் என்ற நிலையில் மலையக தமிழர்களே காணப்பட்டனர்1946 ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் எண்ணிக்கை (இந்திய வம்சாவளியினர்) 11.7 விழுக்காடாக காணப்பட்டபோது . சுதேசிய பூர்வீக தமிழர்களாக கருதப்பட்ட இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடாக இருந்தது. அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடாக இருந்தது. இந்த மலையக மக்களின் அரசியல் பலம் சிங்கள தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல யாழ் மேட்டுக்குடி மையவாத தமிழர்களுக்கும் தமது அரசியல் ஆளுமைக்கும், பிரதிநித்துவத்துக்கும் சவால் விடுவதாக அமைந்ததால் தான் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் அன்றைய அரசுடன் சேர்ந்து இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவளித்தார்.