Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பான் கீ முன் இரண்டாம் தவணையாகவும் ஐ.நா. செயலாளர் நாயகமாகத் தெரிவானதைத் தொடர்ந்து, அவரிடம் கேட்கப்பட்ட முதலாவது கேள்வி இலங்கை தொடர்பானது என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில், எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும், இதற்கு பான் கீ மூன் பதில் வழங்கில்லை.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்கி, இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம் அடுத்தகட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த அறிக்கை தொடர்பிலான அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு, இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளே நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் காணொளி தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த காணொளியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய பேச்சாளர், பான் கீ மூன் இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்திருந்த போதும், அவை அனைத்தும் சனல் 4 காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

0 Responses to நிபுணர் குழு அறிக்கை பான் கீ மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே பதில் இல்லை: இன்னர் சிற்றி பிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com