Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்ற மீறல் தொடர்பான காணொளியை மறுபடியும் சிறீலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தபாய அடியோடு மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றுள்ள நிலையில் அதை அடியோடு மறுப்பதைத் தவிர அவருக்கு மாற்றுவழிகள் எதுவும் இல்லை என்பது முக்கியமான விடயம். ஆனால் அவருடைய மறுப்பு சர்வதேச அளவில் மேலும் பாதகமான நிலையையே ஏற்படுத்தும் என்று அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

சனல் 4ல் காட்டப்பட்ட முன்னைய காணொளிகள் உண்மையானவை என்று நிபுணர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த நிலையில் இப்படியான ஆவணங்களை பொய் என்று பிடிவாதம் பிடிப்பது நிலமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த உதவாது என்பதும் கவனிக்கத்தக்கது. இப்படியான காணொளிகளுக்கு இராஜதந்திர ரீதியாக பதில் கூறும் முறைகள் மற்றய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.சிறீலங்கா இராஜதந்திரம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இதை அணுகியுள்ளது.

0 Responses to போர்க்குற்றத்தைவிட பாரிய குற்றச் செயல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com