பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதிகள் விமானநிலைய நடவடிக்கைகள் முடிவடைந்த பின் புலனாய்வுப் பிரிவினர் வசம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரிட்டனில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நாற்பது இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பியனுப்பப்படவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் மொத்தமாக ஐம்பத்து நான்கு பேர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் கெட்விக் விமான நிலையத்தில் இருந்து விசேட விமானமொன்றின் மூலமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்ட அவர்களில் நாற்பத்தி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் உள்ளடங்குவதாக விமான நிலையத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் தற்போதைக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள குடிவரவுத் திணைக்களம், விமான நிலைய நடவடிக்கைகள் முடிவடைந்த பின், அவர்களின் ஆளடையாளம் உறுதிப்படுத்திக்கொள்ளவுள்ளது.
அதன் பின் பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் மேலதிக விசாரணகளுக்காக புலனாய்வுப் பிரிவினர் வசம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
லண்டனிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் வசம்
பதிந்தவர்:
தம்பியன்
17 June 2011



0 Responses to லண்டனிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் வசம்