ஆஸ்திரேலியா பேராசிரியர் முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வராலாறு" எனும் நூல் வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் இன்று 13.08.2011 சனிக்கிழமை 735, அண்ணாசாலை, சென்னையில் அமைந்துள்ள பாவாணர் நிலைய பாவாணர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு இயக்குநரும் தமிழ் இன உணர்வாளருமான மணிவண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் ஐயா அவர்கள் இந்நூலை வெளியிட்டுவைக்க புலவர் புலமைப் பித்தன் ஐயா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பழ நெடுமாறன் ஐயா அவர்கள் நூலை வெளியிட்டுவைத்து உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஏற்புரையை கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஆற்றினார்.
இவர்களுடன் இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ஊடகவியலாளர் பி.எஸ்.மணி, திரைப்பட இயக்குநர் வ.கௌதமன், மே 17 அமைப்பாளர் திருமுருகன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் இடம்பெற்ற 'இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வராலாறு" நூல் வெளியீட்டு விழா!
பதிந்தவர்:
தம்பியன்
14 August 2011
0 Responses to சென்னையில் இடம்பெற்ற 'இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வராலாறு" நூல் வெளியீட்டு விழா!