Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சிப் பகுதியில் இரவில் பதுங்கி கூட்டம் கூட்டமாக இராணுவத்தினர் எங்கே செல்கின்றனர் என்ற கேள்விகள் பல நாட்களாக இருந்துவந்தது. சிலர் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டைத் தட்டி அவர்களை துன்புறுத்துவதற்காக இவ்வாறு இரவில் அலைவது தெரியவந்துள்ளது. மாலை ஆனதும் சுமார் 6 பேர் கொண்ட சிறிய குழுக் குழுவாக இவர்கள் பிரிந்து முகாம்களில் இருந்து வெளியேறி பின்னர் காலை 4 அல்லது 5 மணிக்கே முகாமுக்குத் திரும்புகின்றனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அதற்கான விடைகள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்துள்ளது. அத்தோடு மாலை வேளையில் எடுக்கப்பட்ட சில புகைப்பட ஆதாரங்களும் தற்போது அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவில் இருக்கும் சில இராணுவத்தினர் இருட்ட ஆரம்பித்ததும் புறப்படும் புகைப்படங்கள் இங்கே இணைத்துள்ளோம்.

இவர்களை இரகசியமாகப் பின்தொடர முடியாவிட்டாலும், இவர்களை இரகசியமாக ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பலர் இரவுவேளைகளில் புறப்பட்டு நடந்து சென்று நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் சில வாகனங்களில் ஏறுவதாகவும் பின்னர் அவர்களை காலை 4 மணிக்கு அதே இடத்தில் அவ்வாகனங்கள் கொண்டு வந்து இறக்குவதாகவும் நேரில்பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவத்தினரைக் கொண்டு இரவு வேளைகளில் புதுமாத்தளான் மற்றும் ரெட்டை முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை துப்பரவாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. மணலைத் தோன்றி அங்கே இருக்கும் எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை அகற்றி அவ்விடங்களை இரகசியமாக துப்பரவுசெய்து வருகிறது இலங்கை அரசு. இவை எல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா ?

அது ஒரு புறம் இருக்க , மாயமனிதன் மற்றும் கிரீஸ் மனிதன் என பலரை உலாவவிட்டுள்ள இலங்கை அரசு, இதன் அச்சம் காரணமாக வீட்டில் இருக்கும் மக்கள் இரவுவேளைகளில் வெளியே வரமாட்டார்கள் என நினைத்து இத் திட்டத்தைப் போட்டுள்ளது.

இரவில் ஊரடங்குச் சட்டம் போட்டு செயல்படுத்த முடியாத சில காரியங்களை இவர்கள் மாயமனிதன் கொண்டு நிறைவேற்றப்பார்க்கிறார்கள். அதுமட்டும் அல்லாது யுத்தம் நடைபெற்ற இடங்களையும் தமிழர்கள் கொத்துக் கொத்தாக இறந்த இடங்களையும் இரகசியமாகச் சுத்தம் செய்துவைத்து விட்டு திடீரென ஒரு நாள் சரி யுத்தம் நடந்த இடத்தை சர்வதேசம் வந்து பார்க்கலாம் என இலங்கை அரசு கூறவிருக்கிறதாம். சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் வேளையில் திடீரென ஒரு நாள் தேவைப்பட்டால் சர்வதேசம் யுத்தம் நடந்த இடத்தை பார்வையிட்டு பகுப்பாய்வுசெய்யலாம் என அறிவித்தல் ஒன்றையும் இவர்கள் வெளியிட திட்டம் தீட்டியுள்ளனர்.

இதன் ஒரு அங்கமாகவே இந்த துப்பரவாக்கும் நிகழ்வுகளும் அதற்கு துணைபோக மாயமனிதக் கதைகளையும் இலங்கை அரசு வேண்டும் என்றே திட்டமிட்ட ரீதியில் செய்துவருவதாக கிளிநொச்சி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிர்வு

0 Responses to இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com