Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சிற்கு விசேட பொலிஸ் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டே கலகொட அத்தே ஞானசார தேரர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையின் போது கடந்த வருடம் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் இனங்களுக்கிடையில் பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் கேட்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால், அப்போது புத்தசாசனம் மற்றும் மதவிவகார அமைச்சின் கீழ் விசேட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் கடந்த ஆட்சியில் இவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இனங்களுக்கு இடையிலான வன்முறை; பொது பல சேனாவின் ஞானசார தேரரிடம் விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com