பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை பதினோறு மணிக்கு வெளியானது. இந்த தேர்வை பள்ளியில் படிக்கும் மாணவர்களும், தனித்தேர்வர்களும் எழுதினர்.
இந்த ஆண்டு தேர்ச்சியானவர்கள் 87 சதவீதம் என்று கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தனித்தேர்வர்களில் சிறை கைதிகளும் அடக்கம். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் ஆகியோரும் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதியிருந்தனர்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி பேரறிவாளன் 1200 க்கு 1096 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் முருகன் 1200-க்கு 983 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். குறிப்பாக வணிகவியல் பாடப்பிரிவில் முருகன் 200-க்கு 200 எடுத்துள்ளார்.
இந்த மதிப்பெண் விவரங்களை சிறைத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும் ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனை செப்டம்பர் 9, 2011 அன்று நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Responses to பிளஸ் 2 தேர்வு முடிவு | பேரறிவாளன் 1096 மார்க்