Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவின் நாடுகடந்த தமிழீழ அரச தேர்தல் பணியகம் அறிவிப்பு! தடைகளை கடந்து செல்ல உதவுமாறு தமிழீழ மக்களிடம் கோரிக்கை!!

நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா (VIC) மாநிலத்தில் ஒரு அங்கத்தவரும் தெரிவு செய்வதற்கான உபதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்தல் பணியகத்தை நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் பணியகம் அறிவித்துள்ளது.

சுதந்திரத்தின் சகல அம்சங்களையும் முற்றாக இழந்து சர்வ தேசத்தின் கூட்டு முயற்சியால் அழிக்கப்பட்டுச் செயலற்று நின்ற ஈழத்தமிழரின் இன்றைய காலத்தின் தேவையாக உருவாக்கப்பட்டதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா. க. த. அ) என்பது எல்லோரும் அறிந்த விடயம். இந்தச் சிறு குழந்தை பிரசவித்து எழுந்து நடப்பதற்கு முன்னதாகவே அதனை அழித்து விடுவதற்கான முயற்சி பெருமளவில் எடுக்கப்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். நாடு கடந்த தமிழீழ அரசை உருக்குலைக்க உள்ளிருந்தும் புறமிருந்தும் பலவிதமான சக்திகளாலும் எடுக்கப்படும் பலவகையான முயற்சிகளுக்கும் முகம் கொடுப்பதிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சக்தி விரயமாக்கப்படுவதே யதார்த்தம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வெற்றிடங்களை இட்டு நிரப்புவதற்கான உபதேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு நாடு கடந்த அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது. இப் பொறுப்பினைச் சரிவரச் செய்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தான் மேற்கொண்ட குறிக்கோளை முன் எடுத்துச் செல்வதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் தம் உதவிக்; கரம் நீட்டித் தமது வரலாற்றுக் கடமையைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ் உபதேர்தல் வரிசையில், அவுஸ்திரேலிய நாட்டில் நியூ சவுத் வேல்ஸ் (Nளுறு) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா மாநிலத்தில் ஒரு அங்கத்தவருமாக மூவரைத் தெரிவு செய்வதற்கான உபதேர்தலை நடாத்தும் முயற்சியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது.

இத் தேர்தலைச் சிறந்த முறையில் நடாத்தக் கீழ்க் காணும், அறிவும் அனுபவமும் ஆர்வமும் மிக்க பிரமுகர்கள், தேர்தற் குழுவில் பணியாற்ற முன் வந்திருக்கிறார்கள். இவர்கள் இத் தேர்தலை நேர்மையாகவும் நடுநிலை தவறாமலும் நடாத்தி வைப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. அவர்களுக்கு உறுதுணையாக மக்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

தமிழீழத்தைக் கட்டி எழுப்பும் முயற்சியில் தமது பங்கனைப் பாராளுமன்ற அங்கத்துவம் மூலம் நிறைவேற்ற விரும்பும் வேட்பாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, முகவரி ஆகிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி நாள், ஆகஸ்ட்டு 28, 2011, பிற்பகல் 6.00 மணியாகும்.


TGTE BY-ELECTION IN VICTORIA AND NEW SOUTH WALES:

Eelam Tamils having lost all elements of freedom as a result of joint international effort
the Transnational Government of Tamil Eelam (TGTE) has been conceived to address the
Eelam Tamil National question from without. That efforts are afoot to disrupt the TGTE’s
agenda even before it embarks on its baby steps is common knowledge in informed
sections of the Tamil Diaspora. There is considerable dissipation of energy and effort at
the TGTE in trying to contain the multi-faceted efforts at disruption attempted, both from
within and without.

Taking action to fill the current vacancies in the TGTE Parliament through By-Elections
is the responsibility of the TGTE Election Commission. The TGTE Elections
Commission counts on the Tamil population in Australia, particularly in Victoria and
New South Wales, volunteering support for smooth conduct of these By- Elections.

The TGTE Election Commission is taking steps to conduct by-Elections to fill two
vacancies in NSW and one vacancy in Victoria. To organize and conduct these
Elections in Australia the following competent, experienced and committed individuals
have come forward to serve in the Election Committee being set up by the TGTE
Election Commission. The TGTE Election Commission believes that they will ensure a
just and fair Election while also expecting the Tamil population in Australia to render the
necessary support and cooperation to have these Elections conducted efficiently and in a
fair manner.

Prospective Candidates desirous of contributing to the initiatives of the TGTE by serving as
Representatives at the TGTE for their Electoral Districts are hereby requested to send in their
Nominations before 6pm on 28 August 2011 (Sunday). Contact information of election officials
is given below:

0 Responses to அவுஸ்திரேலியாவின் நாடுகடந்த தமிழீழ அரச தேர்தல் பணியகம் அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com