Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெக்ஸிக்கோவின் அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்ற 20 வயதாகும் Maria  Susana Flores Gamez  எனும் இளம்பெண் போதைப் பொருள்
கடத்தும் கும்பலுடன் அடையாளம் காணப் பட்டதாகவும் அவர்களை இராணுவம் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய போது பலியானதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நடைபெறும் போது அப்பெண் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அவர் போதைப் பொருள் கடத்திய கும்பலால் மனிதக் கேடயமாகப் (Human shield) பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் தற்போது கூறப்படுகின்றது. Maria  Susana Flores Gamez 2012 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற பெண்களுக்கான சினாலோவா போட்டியில் மகுடம் சூட்டியவர் ஆவார். இவர் இராணுவம் சுற்றி வளைத்த போது தனியாக ஒரு துப்பாக்கியுடன் காரில் இருந்து முதலாவதாக வெளிப்பட்டார் எனவும் ஏனைய துப்பாக்கிதாரிகள் அவருக்குப் பின்னே மறைந்திருந்து தாக்கத் திட்டமிட்டதால் அவரைச் சுட நேர்ந்தது எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மகளிர் விடுதலை அமைப்பு ஒன்று அங்கு உள்ளூரிலும் தேசிய அளவிலும் நடைபெறும் அழகிப் போட்டிகளில் பங்கு பெற்ற அல்லது வெற்றி பெற்ற அழகிகளைப் பணத்தைக் காட்டி இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பல் வளைத்துப் போடுவதாகவும் அதன் பின்னர் அவர்களை ஏமாற்றி கைகழுவி விடுதல் அல்லது ஏதேனும் ஆபத்தில் சிக்க வைப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.

0 Responses to மெக்ஸிக்கோ அழகி போதை மருந்து கடத்தல் கும்பலுடன் சுட்டுக் கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com