கனடாவின் ரொரன்ரோ பெரும் பாக மக்களுக்காக மாக்கம் திடலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாவீரர் சதுக்கத்தில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வு தற்போது முன்றாவது நிகழ்வாக அரங்கம் நிறைந்த வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தாயக வழமைப்படி மாலை 6மணி 5 நிமிடத்திற்கு மணியொழுப்பி ஈகைச்சுடர் ஏற்றும் வகையில் கனடிய நேரப்படி காலை 6.45 நிமிடத்திற்கு கனடிய தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, காலை 7.05 மணிக்கு மணியெழுப்பி 7.07 க்கு முதன்தைச்சுடரை தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஏற்றும் காட்சி திரையில் விரிய மக்கள் கார்த்திகைபூவை வைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அந்த அதிகாலையிலும் அதிகளவான மக்கள் அரங்கத்தை நிறைத்து நின்றமை பெரும் உணர்வலையாக அமைந்தது. மக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருந்தனர். மதியம் 12 மணிக்கு இரண்டாவது அமர்வு ஆரம்பமாகியது. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
மூன்றாவது நிகழ்வு மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி தற்போது மண்டபம் நிறைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொடர் வருகையை காரணமாக பல்லாயிரத்தில் இருக்கைகள் இருந்த போதும், மக்களை ஏனையவர்களுக்கு இடம் வழங்குமாறு தொடர் அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
நான்காவது இறுதி அமர்வு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 15 மணித்தியாலங்களாக தொடர்ந்து நடைபெறவுள்ள 2011 மாவீரர் கனடா ரொரன்ரோ நிகழ்வு என்றுமல்லாத பேரெழுச்சியுடன் மக்கள் உணர்வுகளின் உணர்ச்சிப்பிழம்பாக, அலைஅலையான மக்கள் திரட்சியுடன் மகிந்தாவிற்கும் சர்வ உலகிற்குமாக காத்திரமான தமிழர் செய்தியை சொல்லியவாறு கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தின் ஒருங்கிணைபில் நடைபெற்றுக் கொண்டிருகிறது.







0 Responses to ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 (காணொளி, படங்கள் இணைப்பு)