Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

’’அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது’’ என, முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினார்.

தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இளங்கோவனுக்கு பதிலடிகொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’ ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கு இலவசமாக மண்டபம் வழங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தான் நிறைய கறுப்புப் பணம் வைத்துள்ளார்' என, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி, ரஜினிகாந்த் தான் முடிவெடுக்க வேண்டும்.

அதேசமயம், இளங்கோவன் இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி தான், மத்தியில் ஆட்சி நடத்துகிறது.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, "அவர் வைத்திருக்கிறார், இவர் வைத்திருக்கிறார்' என, இளங்கோவன் புலம்புவது ஏன்?

காரணம், காங்கிரஸ்காரர்கள் தான், நாட்டிலேயே அதிக கறுப்புப் பணம் வைத்துள்ளனர். அதனால் தான், தங்களிடம் முதலீடு செய்திருப்போரின் பட்டியலை வெளியிட சுவிஸ் வங்கிகளே தயாராக உள்ளபோதும், காங்கிரஸ் அரசு தயங்குகிறது’’என்று கூறினார்.

ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

0 Responses to ரஜினிகாந்த் கறுப்புப் பணம் வைத்திருக்கிறாரா? நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஈவிகேஎஸ்ஸூக்கு இல.கணேசன் கேள்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com