நெதர்லாந்தில் நியூவகயன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவெய்திய போராளிகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
மேலும், கப்டன் பண்டிதர்,மேயர் சோதியா,கேணல் சாள்ஸ் மற்றும் இம்மாத காலத்தில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களினதும் வீரவணக்க நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மேயர் சிட்டுவின் சகோதரி ஏற்றி வைத்தார்.அதனை தொடர்ந்து ஈகைச் சுடரினை தமிழர் நடுவம் நெதர்லாந்து [tcn] செயற்பாட்டாளர் நிக்சன் ஏற்றிவைத்தார்.
அதன்பின்னர், மலர்வணக்கத்துடன் கூடிய சுடர்வணக்கம் செலுத்தியதும், தொடர்ந்து கிட்டுவின் வரலாறு , கவி வணக்கமும் இடம்பெற்றன. மாலை 5 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.



நெதர்லாந்தில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 19 மாவீரர்களின் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
25 January 2012



0 Responses to நெதர்லாந்தில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 19 மாவீரர்களின் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)