திமுக ஆட்சியின்போது மின்வாரிய ஊழியர்களுக்கு செய்த சாதனைகளை பாராட்டி மின் கழக தொ.மு.ச. சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை தி.மு.க. தலைவர் கலைஞருக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்று பேசுகிறார்கள்.
இந்த விழாவில் மின் கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிங்கார ரத்தினசபாபதியின் பவள விழா மற்றும் பிறந்தநாள் விழாவும் நடைபெறுகிறது.
தொ.மு.ச. தலைவர் செ.குப்புசாமி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் மு.சண்முகம் வரவேற்கிறார். இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்துகிறார்கள்.
சிங்கார ரத்தினசபாபதி ஏற்புரை நிகழ்த்துகிறார். இதில் பேரூர் நடராஜன், கிருஷ்ணன், சுகுமாரன், பரமசிவம் மற்றும் மின்கழக தொ.மு.ச. நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
இது குறித்து சிங்கார ரத்தினசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தி.மு.க. ஆட்சியில் மின் வாரிய தொழிலாளர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கி 21600 ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திய தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் திரளாக பங்கேற்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



0 Responses to கலைஞருக்கு நாளை பாராட்டு விழா