இந்துமா கடலில் வீரகாவியமான வீரத்தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் நினைவேந்தல் நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக் கிழமை பாரிசில், தமிழர் நடுவத்தின் பணிமனையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தளபதி கிட்டு உட்பட பத்து மாவீரர்களினதும் திருவுருவப்படத்திற்கு, ரஞ்சன் மாஸ்ரர் மலர்மாலை அணிவித்தார். ஈகைச் சுடரினை, நாடுகடந்த தமிழீழ அரசின் தகவல்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மலர்வணக்க அஞ்சலியும் கேணல் கிட்டுவின் நினைவுபாடலாக பாடப்பட்டது.
மேலும், கிட்டண்ணாவின் நினைவுகளை மீட்டுப் பேசிய நாடுகடந்த தமிழீழ அரசின் தகவல்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ் சிங்கள பேரினவாத அரச இயந்திரத்திற்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் இடையிலான சர்வதேச அரங்கில் நிகழ்த்தப்படும் போரில் தமிழ் மக்கள் வெல்லவேண்டுமாக இருந்தால், தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே சிந்தனையுடன் பயணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், அடுத்த சில மாதங்களில், முக்கியமான நாடுகளில் தேர்தல்கள் வரவிருப்பதையும், சில வேளைகளில் ஆட்சிகள் மாறுமிடத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகள் பின்தள்ளப்படும் விரும்பத்தகாத நிலைமைகள் தோன்றக்கூடும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு முன்னராக சிறீலங்கா அரசுக்கு எதிரான சர்வதேச நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் பெப்ரவரி - மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில், சிறீலங்காவிற்கு எதிரான சர்வதேச நிலைப்பாட்டை உறுதிப்படுத்த, நாடுகடந்த தமிழீழ அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் போராட்ட முன்னெடுப்புக்களுக்கும், அனைவரும் முழுமனதுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டுவின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
25 January 2012



0 Responses to பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டுவின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)