Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்….

யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு குண்டைவிட அதிக சக்தியுள்ளதாக தெரிகிறது. அதேபோல கேட்கப்படாத மற்றைய நான்கு கேள்விகளும் வடக்கில் வீசும் வசந்தத்தை செருப்பால் அடித்துள்ளது.

ஐயா இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் இங்கு வரவில்லை..? இதுதான் அந்த மாணவனின் கேள்வி.

கலாம் சொன்ன பதில்: எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். புயலைக் கடந்தால் வசந்தம் வந்துவிடும் கவலைப்படாதீர்கள்.

2009 வன்னியில் நடைபெற்ற போரில் 140.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். குழந்தைகளும், முதியோரும், பெண்களும் துடிதுடிக்கக் கொல்லப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலையில் குண்டு வீசப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் கட்டு மீறி நடந்துள்ளது. வெள்ளைக் கொடியோடு போனவர்களே சுடப்பட்டார்கள். இத்தனை நடந்தும் ஒரு வார்த்தை பேசாமல் இத்தனை ஆண்டுகள் ஒரு தமிழனாக இருந்தீர்களே.. இப்பொழுது எதற்காக வந்திருக்கிறீர்கள்..? இது அந்த மாணவனின் கேள்வியின் உள்ளர்த்தம்.

இந்தியத் திரைப்பட கதாநாயகன் உடன் பிறந்த சகோதரி வில்லனால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படும்போது வரமாட்டான். அவள் அழிந்த பின்னர் புயலைக் கடந்துவிட்டாய்.. இனி உனக்கு வசந்தம்தான் என்று சென்டிமென்டாக பேசியபடியே வருவான். நமது அப்துல்கலாம் பேசிய வசந்தமும் இப்படிப்பட்டதுதான். புயலைக்கடந்தால் தென்றல் வரும் தென்றலைக்கடந்தால் புயல் வரும்.. தானாக நடப்பதற்கு கலாம் ஏன் வரவேண்டும்..?

மனது கேட்கிறது..

இதைவிட முக்கியம் கேட்கப்படாத நான்கு கேள்விகள் : அப்துல்கலாம் எங்கு சென்றாலும் மூன்று கேள்விகள் அல்லது ஐந்து கேள்விகளை கேளுங்கள் என்று மாணவர்களைப் பார்த்துக் கூறுவார். காரணம் இந்திய மாணவர்கள் அவரிடம் கேள்விகளை சரமாரியாக கேட்பதால் அப்படி ஒரு கட்டுப்பாட்டைப் போடுவார்.

ஆனால் இங்கோ… அவரிடம் கேள்வி கேட்கவே தேவையில்லாத நிலை.. இது அவருடைய பல்கலைக்கழக கேள்வி – பதில் வரலாற்றில் விழுந்துள்ள முதலாவது சவுக்கடி.

நான்கு கேள்விகளை மாணவர்கள் கேட்காமலே எழுந்து போய்விட்டார்களே காரணம் என்ன..? பல பதில்கள் உண்டு, அவற்றில் சில :

01. இவரிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது..

02. பத்திரிகையாளரை நுழைய விடாமல் அந்தக் கூட்டம் நடாத்தப்பட்டது. கேள்வி கேட்டால் நாளைக்கு கேட்டவரைத் தூக்க வெள்ளை வான் வரும்.. இதுதான் யாழ்ப்பாணத்தின் சீத்துவக்கேடு.. இராணுவ அச்சுறுத்தலுக்குள் இருக்கும் ஒரு சமுதாயம் கேள்வி கேட்கவே இயலாத நிலையில் இருக்கிறது. கேள்வி கேட்க நாலு பேர் இல்லாத ஒரு காட்டுத்தர்பார் அங்கே நடக்கிறது என்பதுதானே பொருள்..

அந்த கேட்கப்படாத நாலு கேள்விகளும் போதும் நாட்டு நடப்பை எடுத்து விளக்க..

ஐயா.. நீங்கள் இத்தனை நாளும் இங்கு ஏன் வரவில்லை.. மீண்டும் அதே கேள்வி.

மீண்டும் இன்னொரு முறை பதில்..

ஐயா.. நீங்கள் இங்கு வந்ததைவிட,

நீங்கள் செய்த அணுகுண்டை சிங்களவரிடம் கொடுத்திருந்தால் சந்தோசமாக தமிழர் மீது வீசிவிட்டு, நன்றிக்கடனுக்கு சீனாவுடன் உறவு கொள்ளாமல் இந்திய நலனைப் பேணியிருப்பார்களே..

ஆம்…

எங்கள் ஐயா…

உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வியல்ல ஐயா..

உங்கள் அணு குண்டைவிட சக்தி வாய்ந்த தமிழ் அணு குண்டு ஐயா.. ஒரு கேள்விக்கு ஆயிரம் அணுகுண்டைவிட அதிக வலு இருக்கிறது என்பதை படிக்க வேண்டுமானால் டெல்லிக்கு போகக்கூடாது யாழ்ப்பாணம் போக வேண்டும் ஐயா..

உங்களுக்கு கணக்கு படிப்பித்த யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார் கணக்குவிடவும் படிப்பித்திருக்கிறார் என்பதை உங்கள் புயல் பேச்சில் நாம் புரிந்து கொள்கிறோம்.. ஐயா.. அதே வாத்தியார்களிடம்தான் நாமும் கணக்கும், கணக்கு விடவும் படித்திருக்கிறோம் ஐயா..

வாழ்க இராமேஸ்வரம் அப்துல்கலாம்.

1 Response to உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வியல்ல ஐயா..

  1. Well written. Thanks. Keep it up.
    Abdul Kalam should not have gone there late
    He has done historical mistake by going late there.
    Science /Inteligency/ Hard work/ Dedications to the nation / Sacrifices for self satisfactions are not bigger than humanity.
    Kalam should have gone before May 2010. Now it is mere a trip.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com