ஐ.நா நிபுணர் குழுவினால் குறிப்பிடப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக சிறீலங்காவில் புரியப்பட்ட நம்பிக்கையான மற்றும் பாரதூரமான குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்துவதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மாத பிற்பகுதியில் சிறீலங்கா அரசால் உத்தியோபூர்வமாக வெளியிடப்பட்ட பின் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கனடாவின் நிலைப்பாடாக இது கொள்ளப்படுகின்றது.
சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதியில் புரியப்பட்டதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்த பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் குறித்து சிறீலங்கா அறிக்கை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை என்பது குறித்து கனடா கரிசனை கொண்டுள்ளது எனக் குற்றச்சாட்டிய அமைச்சரின் அறிக்கை, ஐ.நா நிபுணர் குழுவினால் குறிப்பிடப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்த கருத்துக்களும் அதற்கான பரிகாரமும் சிறீலங்கா அறிக்கையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறீலங்காவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை கவனத்தில் கொண்டு முழுமையான ஆரய்துவரும் கனடா, சிறீலங்கா ஆணைக்குழு, சில கரிசனையுள்ள விடயங்கள் குறித்து குறிப்பான, நல்லிணக்கம், சட்டம்ஒழுங்கு, இராணுவபிரசன்னக்குறைப்பு குறித்து தெரிவித்துள்ள பரிந்துரைகளை முதன்மைப்படுத்தியுள்ளது.
ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கால நிர்ணயம் செய்து தெளிவான அமுலாக்கத்திட்டத்துடன் அவற்றை அமுல்படுத்துமாறு கனடா வலியுறுத்தி வேண்டி நிற்பதாக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் இனப்பிரச்சனைக்கும் பிரிவினைக்குமான மூல காரணங்கள் தற்போது கண்டறியப்பட்டு அரசியல் நல்லிணக்கம் ஏற்படுவதின் அவசியம் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பொறுப்புக்கூறுதலும், ஏற்புடைய நல்லிணக்கம் குறித்த முயற்சிகளும் சிறீலங்கா அரச தரப்பில் இருந்து இன்றுவரை அரிதாகவே உள்ளது என்பதை சுட்டுக்காட்டியுள்ள கனடிய அறிக்கை தெளிவான நடவடிக்கைகள் தற்போது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.
சிறீலங்கா அரசு சனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தியாக வேண்டும் எனவும் கனடிய அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கனடாவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறீலங்காவிற்கான தற்போதைய விஐயம் கனடாவின் உத்தியோகபூர்வ பாராளுமன்ற குழு ஒன்றின் விஐயம் அல்ல என கனடிய அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறீலங்காவிற்கு நெருக்கமான பெண்மணி ஒருவர் இவர்களை ஒரு தனிப்பட்ட விஐயமாக அழைத்துச் சென்றுள்ளதாக மேலும் அறியப்படுகின்றது. இதில் ஒருவர் இந்திய மலையாள இனத்தையும் அடுத்தவர் சீன இனத்தைச் சேர்ந்தவர் எனவும் மேலும் அறியப்படுகின்றது.
0 Responses to சுயாதீன விசாரணைக்கு கனடா தொடர்ந்தும் வலியுறுத்து