தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் சிறந்தக் காவலனாக திகழ்ந்தவர். ஈழத்தமிழர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்னை, காவிரிப் பிரச்சினை போன்ற தமிழர் பிரச்னைகளில் தீவிரமான ஈடுபாடு காட்டி செயல்பட்டவர். அவரின் மறைவு தென்மாவட்டங்களில் பதற்ற நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அதைத் தணிக்கவும், இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்கவும், தமிழகக் காவல்துறை விரைந்து செயல்படவேண்டும். மறைந்த தலைவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
————-
நேற்று பசுபதி பாண்டியனின் இறுதி ஊர்வலத்தின்போது, ஊர்வலப் பாதையில் இருந்த கடைகளை கண்மூடித்தனமாகத் தாக்கி முற்றிலும் சேதப்படுத்தியுள்ளனர். சுமார் நூற்றுக்கும் அதிகமான பெரிய கடைகள் நாசமாகின. கடைகளுக்கு வெளியே இருந்த பைக்குகள், கார்கள் உள்ளிட்டவையும் தாக்குதலுக்கு இலக்காகின. இவை அனைத்தும் வெளியூர்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விஷமிகள் செய்த வேலை என்று உள்ளூர்க்காரர்கள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அமைதி நடவடிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று திருமாவளவன் தூத்துக்குடிக்கு வரவுள்ளார். இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 Responses to பசுபதி பாண்டியன் படுகொலை: பழ. நெடுமாறன் கண்டனம்