தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்கப்படும் போது இந்திய மத்திய அரசாங்கம் அதில் தலையிடாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது
என்று திராவிட முன்னேற்றக்கழகம் தெரிவித்துள்ளது.
கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, இலங்கைக்கு சென்று மீனவர்களின் பிரச்சினைக்குறித்து பேச்சு நடத்திய மறுநாளே இலங்கை கடற்படையினர்
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே, இலங்கை வழங்கியதாக கூறப்படும் உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதையே இது உணர்த்துகிறது.
இதனை தொடர்ந்தும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் விரைந்து செயற்படவேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதல்கள் தமிழக மக்களை கொதிப்படைய
செய்துள்ளதாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள்: கருணாநிதி
பதிந்தவர்:
தம்பியன்
25 January 2012



கம்முன்னுகிட கம்மனாட்டி,.... முதல்வரா இருந்தப்ப இந்த வீரத்தை என்கையா ஒழிச்சு
வச்சிருந்தா? அப்பெல்லாம் சிங்களவன் மீனவப் பசங்களுக்கு ஒண்ணுமே பண்ணாத மாதிரி
பேசுற ,...... கஸ்மாலம் சும்மா வேசம் கட்டாத,... . ஒண்ணைப்பத்தி ஒலகத்துக்கே தெரியும் .