Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசு நயவஞ்சகமான சூழ்ச்சியில் இறங்கியுள்ளது. ஜனாதிபதியின் மிரட்டல்.. கிரிமினல்களின் அட்டகாசம் யாழில்...

மே 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததுடன் முடிவுக்கு வந்த இலங்கையின் கால் நூற்றாண்டுகால சிவில் யுத்தத்தின் மோசமான பின்விளைவுகளின் தாக்கமே, 2011 வரையான நிகழ்வுகள் மீதும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றது.

நிபுணர்கள் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையானது, “அரசாங்கப் படைகளும் புலிகள் இயக்கமும் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின்போது சாதாரண சிவில் மக்களின் பாதுகாப்பு, அவர்களின் உயிர்கள், உரிமைகள், மற்றும் நலன்கள் என்பவை தொடர்பாக மிக மோசமான அலட்சியப்போக்கை கடைப் பிடித்துள்ளதோடு, சர்வதேச சட்ட விதிமுறைகளை மதித்து நடக்கவும் தவறியுள்ளன” என்ற முடிவுக்கு வந்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச ரீதியான அமைப்பு வடிவமொன்றை நிறுவுமப் டியும் அந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்பானது, அந்நிபுணர்கள் குழுவையும் அவர்களின் அறிக்கையையும் இழிவுபடுத்தும் விதத்திலேயே
அமைந்துள்ளது.

பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ள யுத்தக்குற்றங்கள் தொடர்பாக காணப்படும் பெருமளவான சாட்சியங்கள் அனைத்தையும் புலிகளின்
பிரச்சாரங்கள் எனப் புறந்தள்ளியபடி, அரசாங்கமானது அக்குற்ற ங்கள் தொடர்பாக எந்தவிதநம்பத்தகுந்த விசாரணைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டது.

தேசிய ரீதியான பொறுப்புக்கூறல் செயற்பாடு என வர்ணிக்கப்படுகின்ற, கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கத் துக்கான ஆணைக்குழுவானது மிக மோசமான குறைபாடுகளைக் கொண்டிருப்பதோடு, அத்தகைய ஆணைக்குழுக்கள் கொண்டிருக்க வேண்டிய சர்வதேச தராதரங்கள் எதனையும் அது கொண்டிருக்க வில்லை.

அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள துஷ்பிரயோகங்கள் தொடர்பாக எந்தவித முறையான விசாரணைகளையும் அது மேற்கொள்ளவும் தவறிவிட்டது.கடந்த மூன்று தசாப்தங்கள் வரை நடைமுறையில் இருந்த அவசரகால சட்டத்தை ஆகஸ்ட் மாதத்துடன் காலா வதியாகிச் செல்ல அரசாங்கம் அனுமதித்தாலும்கூட, ஏனைய பல சட்டங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் மூலம் தடுத்து வைப்பதற்கான பரவலான அதிகாரங்களை அப்படியே நடை முறையில் இருக்க அநுமதித்துள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறுகின்ற வகையில் பல ஆயிரக்கணக்கான நபர்கள் எந்தவித நீதி விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொறுப்புச்சொல்லுதல் மோதல் நடந்த இறுதி மாதங்களில் பொதுமக்கள் மீது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட
கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள், மற்றும் புலிகள் இயக்கத்தினால் ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் “மனிதக் கேடயங்களாகப் பாவிக்கபட்டமை, உட்பட மிக நீண்ட சிவில்
யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் பரவலாக மேற்கொள்ளபப் ட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக, சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குவது தொடர்பான விடயத்தில் ஸ்ரீ லங்கா அரசாங்கம்
எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து இதுவரை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள துஷ்பிரயோகங்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான நம்பத்தகுந்த விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக, பிரித்தானிய
தொலைக்காட்சி நிலையமான சனல் 4 ல் ஜுன் 2011ல் காண்பிக்கப்பட்ட மிகக் கொடிய காட்சிகள், மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் நீதி
விசாரணைகள் இன்றி சுட்டுக்கொல்லப்படும் பல காட்சிகள் என்பவை தொடர்பாக எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல் இருக்கின்றமை ஒருவித சூழ்ச்சித் தன்மைகொண்டதாக
இருக்கின்றது.

அதேவேளை, அக் காட்சிகள் நம்பகத்தன்மை உளள் வை என்று பல்வேறு சுயாதீனமான நிபுணர்களின் அறிக்கைகள் கருத்து வெளியிட்ட பின்னரும்கூட, அரசாங்கம் அக்காட்சிகள் இட்டுக்கட்டப்பட்டவை என திரும்பத் திரும்ப அவற்றை நிராகரித்து வந்துள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பான ஒரு சர்வதேச மாநாட்டை ஸ்ரீ லங்காவின் பாதுகாப்பு அமைச்சானது தலைநகர் கொழும்பில் நடத்தினாலும், அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக மிக அற்ப அளவிலான கவனமே அங்கு செலுத்தப்பட்டது. மோதல்கள் நிகழ்ந்த இறுதி மாதங்களில் அரசாங்கப் படைகளினால் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை முதல் முறையாக ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பு அமைச்சு ஆகஸ்ட் மாதத்தில் தமது சொந்த அறிக்கையை வெளியிட்டது. ஆனாலும் அவை யுத்தத்தின்போது தவிர்க்க முடியாத துரதிஷ்டமான விளைவுகள் என்று கூறி எந்தவித விசாரணைகளும் இன்றி எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்ததோடு, யுத்த சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாக எந்தவிதமான பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

மிக மோசமான அத்து மீறல்கள் நிகழ்ந்துள்ள பல பழைய சங்பவங்களிலும்கூட குற்றம் புரிந்தவர்கள் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது.

2006ம் ஆண்டில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களான, 17 தன்னார்வ உதவிப் பணியாளர்கள் மரண தண்டைனைப் பாணியில் கொல்லப்பட்டது, மற்றும் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதுமான சம்பவங்களில் அரசாங்கப் படைகளுக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி
உறுதியான சாட்சியங்கள் இருந்தும்கூட அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்ச்சியாகவே எவ்வித காத்திரத் தன்மையும் இல்லாதிருப்பதோடு அக்குற்றங்கள் தொடர்பாக இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதற்கான காலவரையறையை அரசாங்கம் மீண்டும் மீண்டும் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்துள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுவிற்கு
வழங்கப்பட்டுள்ள ஆணையானது, குறிப்பாக அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையேயான மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் 2002ல் முறிவடைந்தமை தொடர்பானதாக இருக்கிறதேயல்லாமல், மோதலின்போது நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படும் யுத்தக் குற்றங்கள்
தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வது பற்றி குறிப்பான கவனம் எதையும் செலுத்தவில்லை.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழு பலரின் வாக்குமூலங்களுக்கு செவிமடுத்தாலும் மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் பற்றி எந்தவித
பொறுப்பையும் எடுக்கவில்லை. கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது தனது அறிக்கையை நவம்பர் 15ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம்
கையளிப்பதாக இருந்தது. மேலும், அந்த அறிக்கையானது பகிரங்கமாக வெளியிடப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தாலும் அது எப்போது செய்யப்படும் என்பது பற்றி எதுவும் கூறவில்லை. அதுமட்டுமன்றி கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆரம்பப் பரிந்துரைகளின்படி அரசாங்கம் செயற்படவுமில்லை.

சித்திரவதை, பலாத்கார காணாமல்போதல் மற்றும் சட்டவிரோத தடுத்துவைப்பு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஆகஸ்ட் மாதத்துடன் காலவதியாகிப்போக அரசாங்கம் அனுமதித்தது. அதேவேளை, நபர்களை தடுத்து வைப்பதற்காக
பொலீசாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இருந்த பரந்த அளவிலான அதிகாரங்களை வழங்குகின்ற ஏணைய சட்டங்களை இரத்துச் செய்வதற்கும் அரசாங்கம் தவறிவிட்டது. அத்துடன்,
அவசரகால சட்டத்தை ஒத்ததான பல புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு நபர்களை தடுத்துவைப்பதற்கான அதிகாரங்களை வழங்கும் கட்டளைகளையும் ஜனாதிபதி மாதாந்தம் பிறப்பித்தபடியுள்ளார்.

அவசரகாலச் சட்டம் நடைமுறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டாலும், அவசரகால சட்டவிதிகளின்படி ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் தொடர்ந்தும்
தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சட்டங்களை மீறுகின்ற வகையில் இன்னமும் பலர் வருடக்கணக்காக எந்தவித நீதி விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு
தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்குக்கூட அரசாங்கம் இதுவரை மறுப்புத் தெரிவித்தே வந்துள்ளது.

யுத்தம் முடிவுற்ற பின்னர், புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்பட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11,000க்கும் மேற்பட்ட புலிகள் இயக்க சந்தேக நபர்களில் பலரை படிப்படியாக
அரசாங்கம் விடுவித்தாலும் சகலரையும் இன்னமும் விடுவிக்க வில்லை. பலர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு சட்ட ஆலோசனைகள் பெறுவது போன்ற
அவர்களுக்குள்ள மிக முக்கிய உத்தரவாதங்கள் கூட அரசாங்கத்தால் மறுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு தமது வீடுகளுக்குத் திரும்பிய சில
கைதிகள் திரும்பவும் பாதுகாப்பு படையினரால் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

2011ல் வடக்கு கிழக்குப் பகுதிகளில் “காணமல்போதல சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியதோடு, அச்சம்பவங்கள் சிலவற்றில் அரசியல் கட்சிகளின் தொடர்பும் இன்னும் சிலவற்றுக்கு கிரிமினல் குழுக்களின் தொடர்புகளும் உள்ளன. வடக்கின் சில பிரதேசங்களுக்கு
பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கிவிட்டிருத்லும், அங்கு மிகப் பெருமளவிலான பாதுகாப்பு படையினரின் பிரசன்னத்தை தொடர்ந்தும் அது வைத்திருக்கிறது. வன்முறைகள் மற்றும் கிறீஸ் பேய்களினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் தாக்குதல்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிகழ்ந்ததும், சில வேளைகளில் கிறீஸ் பேய்கள எனப்பட்டவர்கள் இராணுவ
முகாம்களுடன் தொடர்புபட்டிருப்பதும் வடக்கு கிழக்கில் அச்சம் உருவாகுவதற்கான காரணங்களாக அமைந்துள்ளன.

சந்தேகத்திற்கு இடமானவர்களை தடுத்து வைப்பதற்கான அபரிமிதமான அதிகாரங்களை பயங்கரவாத தடுப்புச் சட்டமானது பொலீசாருக்கு வழங்கியுள்ளது. பொலீசாரினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் தொடர்பான விடயத்தில் ஸ்ரீ லங்கா பொலீசாருக்கு நீண்டவரலாறு உள்ளதோடு, சில சந்தர்பங்களில் நபர்கள் தடுப்புக்காவலின்போது இறந்து போயும் உள்ளனர்.

சிவில் சமூகமும் எதிர்கட்சி அங்கத்தவர்களும் சுதந்திரமாக கருத்து வெளியிடும் செயற்பாடானது 2011ல் தாக்குதலுக்கு உள்ளாகியது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையின் ஆசிரியரான ஞானசுந்தரம் குகநாதன் ஜுலை மாத பிற்பகுதியல் இனந்தெரியாத குழுவொன்றினால் இருமபுப் பொல்லுகளால் தாக்கப்பட்டார். அவர் மிக மோசமான காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானார். ஜுலை மாதத்தில் ரேடியோ நெதர்லாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பொலீசாரினால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதோடு, பின்னர் இலங்கையில் பயங்கரத்துக்கு பெயர்போன வெள்ளை வானில் வந்த குழுவொன்றினால் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டு தாக்கப்பட்டனர். (2009ல் சுட்டுக் கொல்லப்பட்ட) லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரரும் சண்டே லீடர் பத்திரிகையின் பணிப்பாளருமான லால் விக்கிரமதுங்கவை தொலைபேசியல் அழைத்த ஜனாதிபதி, உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழல் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையொன்று தொடர்பாக கடிந்து கொண்டார்.

“நீ பொய்களை எழுதுகிறாய், நாகரீகமில்லாது பொய்களை எழுதுகிறாய். நீ என்னை அரசியல் ரீதியாக தாக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் தாக்கினால் உன்னை எப்படி தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது எனக்கும் தெரியும்” , என்று ஜனாதிபதி விக்கிரமதுங்கவுக்கு கூறினார்.

2010 ஜனவரி 24ம் திகதி காணமல்போன லங்கா ஈ நியூசுக்கு தனது பங்களிப்பை வழங்கிய ப்ரகீத் எக்னெலிகொட, அல்லது கொல்லப்பட்ட லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பான
விசாரணைகளில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஜுன் மாதத்தில் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னரான பிரச்சாரங்களின்போது யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (டீ.என்.ஏ) ஆதரவாளர்கள் இராணுவத்தினரால் வெல்டிங் கம்பிகள், பற்றன் பொல்லுகள், தடிகள் என்பவற்றினால் தாக்கப்பட்டனர். காயப்பட்டவர்களில் டீ.என்.ஏ. பாராளுமன்ற அங்கத்தவர்களும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலீஸ் உத்தியோகத்தவர்களும் அடங்குவர். அச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளரினால் உத்தரவிடப்பட்டாலும் அதன் முடிவுகள் என்ன என்பது இன்னமும் தெரியவரவில்லை.

ஜனாதிபதியினதும் அரசாங்கத்தின் ஏனைய உயர் அதிகாரிகளினதும் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தினார்கள் என்று கூறி நவம்பர் மாதத்தில் அரசாங்கம் ஆகக் குறைந்தது ஆறு இணைய தளங்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் ;

தமிழ் சமூகத்தின் நீண்டகால அபிலாஷைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டிய மீளிணக்க முயற்சிச் செயற்பாடானது இயன்றளவு மெதுவாகவே நகர்த்தப்படுகின்றது. மார்ச், ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மூலம் ராஜபக்சவின் ஆட்சி மென்மேலும் உறுதியாக்கப்பட்டுளள்து. இருந்தாலும், வடக்கில் தமிழ்
தேசிய கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளது. சிவில் யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்த மாகாணங் களுக்கான அதிகாரப் பகிர்வு உட்பட ஏனைய பல விடயங்கள்
தொடர்பாக அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனமானதும் ஏளனமானதுமான நடைமுறைகளால், அப் பேச்சுக்கள் மோதலும் இழுபறியும் நிறைநத் தாகவே இருக்கின்றன. அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடக்கில் தமக்கு கிடைத்த வெற்றியின் பயனாக புலிகள் இயக்கத்தைப்போலவே காலக்கெடுக்களை முன்வைக்கின்றது, என அரசாங்கம் அவர்களைக் குற்றம் சாட்டுகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கத்துடனான
பேச்சுவார்த்தைகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேறியதோடு பின்னர் அது மீண்டும் பேச்சுகளுக்குத் திரும்பியது.

தமது மீளிணக்க முயற்சிகளானது சமூகங்களுக்கிடையே “ நம்பிக்கையையும் இணக்கப்பாட்டையும் கட்டியெழுப்புவதில”; உறதியாக செயற்படுவதாக அரசாங்கம் ஜ.நா.வின்
மனித உரிமை கவுன்சிலில் தெரிவித்த கருத்து தொடர்பாக, செப்டெம்பர் மாத்தில் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்களின்
அனுபவங்களைப் பொறுத்த மட்டில் அது அவ்வாறு இல்லை என தெரிவித்தது.

நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்த நபர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த தடுப்பு முகாம்களில் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டிருந்த 300,000தை அண்மித்தவர்களில் மிகப் பெரும்பான்மையான நபர்கள் மீண்டும் சமூகத்தினுள் செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தாலும். நிட்சயமாக அவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்குத்தான் திரும்பிச் சென்றுள்ளார்கள் என்பதில்லை.

அண்ணளவாக 110,000 நபர்கள் இன்னமும் வேறு குடும்பங்களின் தயவில் தங்கி வாழ்வதுடன். தமது வீடுகள் இருக்கும் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால் பல்லாயிரக் கணக்கானவர்கள் இன்னமும் முகாம்களிலேயே வாழ்கின்றனர். சர்வதேச கண்ணி வெடியகற்றும் அமைப்புகளுக்கு பல பிரதேசங்களுக்கும் செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் இன்னமும் வழங்கவில்லை.

பிரதான சர்வதேச சக்திகள்

ஐ.நா. சபை செயலாளரின் ஆணையின் அடிப்படையில் தயாரிக்கபப் ட்டு கடும் கண்டனத்துடன் வெளிந்த நிபுணர்களின் அறிக்கையின் பின்னர், பொறுப்புச் சொல்லுதல் என்னும் விடயம் தொடர்பாக சர்வதேச சக்திகளின் அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கின. அறிக்கையில் உள்ளடக்கியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ லங்கா உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல
நாடுகள் கேட்டுக்கொண்டன. “ஐ.நா சபையின் அறிக்கையையும், பொறுப்புச் சொல்லுதல் விடயமாக ஸ்ரீ லங்காவில் நடை பெறவேண்டிய செயற்பாடுகளையும் தாங்களும் ஆதரிப்பதாக”
தீர்மானமொன்றை மே மாதத்தில் ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம் நிறைவேற்றியதோடு குறிபிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும்
ஐரோப்பிய யூனியன் ஸ்ரீ லங்காவை வலியுறுத்தியது.

இலங்கையில் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பெரும்பாலும் மௌனமாக இருந்த இந்தியாகூட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மே மாதத்தில அழுத்தங்களைப் போட ஆரம்பித்தது. அத்துடன், சட்டவிரோத படுகொலைகள், எதேச்சதிகார மரணதண்டனை மற்றும் விசாரணையின்றி சுட்டுக்கொல்லுதல் என்பவற்றுகான ஐ.நா சபையின் விசேட பிரதிநிதியும், ஸ்ரீ லங்காவில் “சட்டவிரோத படுகொலைகள் என்பதன் வரைவிலக்கணத்திற்கு பொருந்துவதுபோல்” அரசாங்கம் கைதிகளை படுகொலை செய்ததற்கான சாட்சியங்கள் இருப்பதாகக் கூறி, அது பற்றிவிசாரணைகளை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோரினார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை செப்டெம்பர் மாதத்தில மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளித்ததோடு, அவ்
அறிக்கையின் பரிந்துரைகள் ஒன்றின் அடிப்படையில், ஸ்ரீ லங்காவில் யுத்தம் நடைபெற்ற இறுதி மாதங்களில் அதன் சொந்த நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றி
தனியானதொரு விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பை ஐ.நா. ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவித்தார்.

பொறுப்புச் சொல்லுதல் என்னும் விடயமாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீள் இணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையானது சரியான முறையில் கேள்விகளை எழுப்பவில்லையானால்,
பொறுப்புச் சொல்லுதல் விடயம் தொடர்பாக சர்வதேச ரீதியாக அதனைச் செய்கின்ற அமைப்பொன்றின் அவசியத்தை தாங்கள் ஆதரிப்பதாக பல்வேறு அரசாங்கங்கள் சுட்டிக்காட்டின.

செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக உதவிச் செயலாளர் ரொபட் ப்ளேக் கருத்து தெரிவிக்கையில், முழுமையான, நம்பதத் குந்த மற்றும் சுதந்திரமான
வகையில் பொறுப்புச் சொல்லுதல் நடைபெற வில்லையானால், “அதற்கான மாற்று செயல்முறை
ஒன்றுக்கான அழுத்தங்கள் கொடுக்கப்படும என்றார். அதே வேளை 2011ம் ஆண்டு முடிவடைகையில் ஸ்ரீ லங்கா அரசாங்கமானது சரியான முன்னேற்றத்தை காண்பிக்கத் தவறினால்
“சர்வதேச சமூகமானது ஏனைய எல்லா மாற்று வழிகளையும் மீள் கவனத்திற்கு எடுப்பதற்கான ஆதரவை தாமும் வழங்குவதாக” இங்கிலாந்தும் அறிவித்தது.

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புச் சொல்லுதல் என்னும் விடயங்களில் முன்னேற்றம் அவசியம் என்னும் கடும் நிபந்தனைகளை முன்வைத்து அமெரிக்காவும் ஸ்ரீ லங்காவுக்கான இராணுவ உதவிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மனித உரிமைகள்பற்றிய விடயத்தில் ஸ்ரீலங்கா தனது முன்னேற்றத்தை காட்டாத பட்சத்தில், 2013ம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருககும் பொதுநலவாய நாடுகளின்தலைவர்களின் உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர்ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் அறிவித்தார்.

0 Responses to மனித உரிமைகள் அமைப்பின் முழுமையான அறிக்கை தமிழ் வடிவில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com