
ஈரோட்டில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ’’இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்.
நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன்.
தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது.
இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.
இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான்.
இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான்.
தமிழ்நாட்டில் பலமணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. பால் விலை-பஸ் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர்’’ என்று கூறினார்.
குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்...
இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரியவில்லை: குஷ்பு பேச்சு
பதிந்தவர்:
Anonymous
26 January 2012



First of all, this girl kuchapu does not know what is life and how live at all.
Bloody talking about tamil here.