Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத் தமிழ் இனத்தை அழிக்கப் படுகொலைகள் நடத்திய சிங்கள அரசுக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் பிப்ரவரி 27-ஆம் தேதி கூட இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக துரோகம் இழைத்து வரும் இந்திய அரசு நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாகும் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.

2009 - இல் இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு, இப்பொழுது ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் அத்தகைய துரோகத்தைச் செய்யக் கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.

0 Responses to ஈழத் தமிழ் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கும்,இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது!: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com