ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்தி வரும் தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு, சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணபடம் வலுச்சேர்த்துள்ளது.
இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், ஜெனீவாவில் இருந்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சனல்-4 தொலைக்காட்சியின் முந்தயை முதலாவது ஆவணப்படம், ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிட்டபோது கடும் அதிர்வலைகளையும், இலங்கைக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருந்தது.
இதன் தொடர்சியாக சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம,; இங்கு திரையிடப்படவுள்ள நிலையில், அது மேலும் கடுமையான நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்துவதோடு, இலங்கை தரப்பின் பொய்ப்பரப்புரைகள் கட்டுடைந்து போகும் நிலை ஏற்படுமென தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை இலங்கை அரச தரப்பினர் ஏற்பாடு செய்திருந்த உப மாநாடொன்று, ஐ.நா மனித உரிமைச் சபையில் பிசுபிசுத்துப் போகியுள்ளதாக தெரிவித்துள்ள நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள், இந்த உப மாநாட்டை முழுமையாக நடத்தமுடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருந்தமை, அவர்களுடைய பலவீனமான நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதை உணரக்கூடியதாக இருந்ததென தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரேரணை, இலங்கையின் இறையாண்மைக்குள் தலையிடுகின்ற விடயமென குறிப்பிட்ட இலங்கை தரப்பினர், உள்நாட்டு விவகாரத்தை தாங்கள் உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்கின்றோம் என தெரிவித்திருந்த போதும், உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தோருக்கு இக்கருத்து திருப்தி தரவில்லை.
குறிப்பாக பல்வேறு தரப்பினராலும் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் கூறமுடியாத, நிலைதடுமாறிய கட்டத்தில், சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகளை நோக்கிய நீங்கள் புலிகளின் பணத்தில்தான் இங்கு வந்துள்ளீர்கள் என இலங்கை தரப்பினரின் வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தமை, பலரையும் கோபமடைய செய்துள்ளதென தெரிவிக்கின்றனர்.
இலங்கை தரப்பின் இந்தகைய போக்கு, பலவீனமடைந்து போகும் அவர்களுடைய நிலையையே வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை தாங்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
சனல்-4 ஆவணப்படம், இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டியுள்ளது! தமிழீழ அரசாங்கம்
பதிந்தவர்:
தம்பியன்
16 March 2012
0 Responses to சனல்-4 ஆவணப்படம், இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டியுள்ளது! தமிழீழ அரசாங்கம்