Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வாரம் அமெரிக்க படைத்துறை சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் சிறு பிள்ளைகள், பெண்கள், ஆண்களென 16 அப்பாவி ஆப்கானிஸ்தானிரை சுட்டுப் பொசுக்கியது பழைய கதையாகிவிட்டது. இப்போது வீறு கொண்ட ஆப்கான் அதிபர் ஹர்மீட் ஹர்சாய் நேட்டோ படைகள் இனி முகாமிலேயே இருக்க வேண்டும் என்று அறுதியாக தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு கிராமங்கள் நகரங்கள் தோறும் நடமாடும் படையினரை அங்கிருந்து விலத்தி முகாம்களுக்குள் வைக்கும்படி அமெரிக்க படைத்துறை அமைச்சர் லியோன் பனீற்றாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அமெரிக்க படைத்துறையின் கொலை சந்தேக நபர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் என்பதற்கான விளக்கத்தை அவருடைய சட்டத்தரணி ஜோன் ஹர்ரி பிரவுண் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெற்ற கண்ணி வெடித்தாக்குதலில் அமெரிக்கப்படை வீரர் ஒருவருடைய கால் பறந்திருக்கிறது. மேற்கண்ட படைவீரர் கொலையாளியின் நண்பராவார். நண்பருடைய குடும்பத்தினர் அங்கு வந்து கதறி அழுத காட்சியால் முகாமே சூடேறிக்கிடந்தது. இதன் காரணமாக தூண்டுதலடைந்த சார்ஜன்ட், ( ரம்போ திரைப்பட பாணியில் ) பொது மக்களை கொன்று தள்ளினார் என்றும் தெரிவித்தார். ஆக ஒரு மனோநிலை பாதிக்கப்பட்ட சிப்பாயின் செயல் என்பது அவருடைய வாதமாக இருந்தது. மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள அவரைக் காப்பாற்ற பைத்தியம் என்று பட்டம் சூட்டுவதே மிகவும் வாய்ப்பான வாதாட்டமாகும். நோர்வேயில் 76 பேரை கொன்ற பயங்கரவாதி ஆனாஸ் பிகார்ஸ் பிறீவிக் பைத்தியம் என்ற தலைப்பில் தப்பிக்க வழி பிறந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இப்படியான பைத்தியங்கள் தண்டனையில் இருந்து தப்பியதும் இயல்பு மனிதராக மாறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

இது இவ்விதமிருக்க கடந்த மாதம் எகிப்தில் இடம் பெற்ற உதைபந்தாட்ட மோதலில் 75 பேர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இந்த படுகொலைகளை புரிந்த 75 சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்பட்டார்கள். இவர்களில் ஒன்பது போலீசார், மூன்று பேர் மேர்சி வி.கவின் சம்பளம் பெறும் ஊழியர், ஒரு பொறியியலாளர் ஆகிய 13 பேரும் தலைமைக் குற்றவாளிகளாவர். மற்றயவர்கள் ஏவல் பேய்களாகி கொலை புரிந்த நபர்களாகும் என்று கூறப்படுகிறது.

0 Responses to நேட்டோ படைகளை முகாமில் அடைக்க வேண்டும் ஹர்சாய்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com