Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனல்- 4 காணொளி அடிப்படையற்றது: இலங்கை

பதிந்தவர்: தம்பியன் 12 March 2012

பிரிட்டனின் சனல்- 4 ஊடக வலையமைப்பினால் எதிர்வரும் புதன் கிழமை வெளியிடப்பட உள்ள இலங்கை தொடர்பான, இரண்டாம் காணொளி அடிப்படையற்றது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனல்- 4 ஊடகம் அடிப்படையற்ற வகையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி மற்றுமொரு கணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பான செய்தி அறிக்கையிடலின் போது, சனல்- 4 ஊடகம் ஒரு பக்கச்சார்பான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் சனல்- 4 ஊடகம் காணொளிகளை வெளியிட்டு வருகின்றது.

இதே வேளை, போரின் பின்னர் நாட்டில் பல சாதகமான நிலைமைகளை சனல்- 4 ஊடகம் கண்டுகொள்ளத் தவறியுள்ளதாகவும் பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழு அளவிலான நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் எனவும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to சனல்- 4 காணொளி அடிப்படையற்றது: இலங்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com