இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பதிலளித்தேயாக வேண்டும் என நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நோர்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தாமதமின்றி பதிலளிக்க வேண்டும். அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நோர்வே கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் நோர்வே அறிவித்துள்ளது.
இதேவேளை, ஐ.நாவுக்கான டென்மார்க்கின் நிரந்தரப் பிரதிநிதியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பவருமான ஸ்டீபன் ஸ்மிட் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையுடன் இணங்கிச் செயற்பட வேண்டும். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மனிதஉரிமைகள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு பதிலளித்தல் என்பன இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மனித மீறல்களுக்கு இலங்கை பதிலளித்தேயாக வேண்டும்: நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம்
பதிந்தவர்:
தம்பியன்
14 March 2012



0 Responses to மனித மீறல்களுக்கு இலங்கை பதிலளித்தேயாக வேண்டும்: நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம்