போரின் போதான கற்கைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் ஆரோக்கியமான கருத்துக்களை நடைமுறைப்படுத்தவே அமெரிக்கா கோரும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது என்பதையும் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கூற்றுச் சரியென்பதை அமெரிக்காவின் இன்றைய தீர்மானம் எடுத்தியம்பியம்பியுள்ளது.
இன்றைய தீர்மானத்தின் படி அமெரிக்காவானது இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் இனங்களிடையேயான நல்லிணக்கம் மற்றும் இன ஒன்றிணைவிற்கான ஆரோக்கியமான பரிந்துரைகளை சகல இனங்களிற்கும் நீதியான சம உரிமை மற்றும் காத்திரமான வாழ்க்கை முறைக்கான நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தல்
நல்லிணக்க ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளிற்கு ஏற்ப இதுவரை செய்யப்பட்டவை தொடர்ந்து செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்த விரிவான அறிக்கையை இலங்கையைக் கோருவதோடு சர்வதேச சட்டமீறல்கள் எனக் கருதப்படும் போரின் போதான செயற்பாடுகளை கருத்திலெடுத்துப் பதிலளிக்கக் கோருதல் மற்றும்
மேற்படி செயற்பாடுகளை இலங்கை தொடர்ந்து செய்வதற்கான விசேட நெறிகளை ஐ.நா. மனிவுரிமையை ஆணையமும் அதன் மேதகு தலைவரும் ஏற்படுத்தி மேற்படி கோரிக்கைகளை இலங்கை நடைமுறை செய்வதற்கு வழிசெய்து அதற்கான அறிவுரைகள் மற்றும் சரீர உதவிகளைச் செய்தல் என்பதையே அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
இந்தக் கோரிக்கைகள் ஐ.நா. மனிதவுரிமை அமைப்பின் தற்போது நடைபெறும் 22வது கூட்டத் தொடரில் ஏற்கப்பட்டால் “சகல சகல இனங்களிற்கும் நீதியான சம உரிமை மற்றும் காத்திரமான வாழ்க்கை முறைக்கான நடவடிக்கைகள்” என்ற பதத்தின் கீழ் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்கான சாத்தியம் அதீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்
வட-கிழக்கில் மேலதிகமாக நிலை கொண்டுள்ள சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு இலங்கைஉட்படுத்தப்படும்.
அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் கனடா ஆகியவை ஆதரிக்கும் காரணத்தால் இலங்கை இதனைப் புறந்தள்ள முடியாது. குறிப்பாக இது உலக வங்கியின் அடுத்த கூட்டத்தொடரில் கடன் பெறுவதற்கான நெருக்கடியையும் சிறீலங்காவிற்கு ஏற்படுத்தும்.
கூட்டமைப்பின் எதிர்வுகூறல் பலித்தது! அமெரிக்காப் பிரேரணை அதைப் பறைசாற்றியது!
பதிந்தவர்:
Anonymous
08 March 2012



0 Responses to கூட்டமைப்பின் எதிர்வுகூறல் பலித்தது! அமெரிக்காப் பிரேரணை அதைப் பறைசாற்றியது!