Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் அமெரிக்காவுக்கெதிராக இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக, அமெரிக்கா அரசாங்கம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரச தலைவர்களும், அமைச்சர்களும் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெளிப்படையாகவே தலைமை தாங்குவது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அத்துடன் அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச விடுத்துள்ள அழைப்புத் தொடர்பான செய்திகளுக்கு அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

இந்நிலையில், ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் டோனஹே, ஏபி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், ஜெனிவா தீர்மானத்தை இலங்கையில் எதிர்மறையாகவே பிரதிபலிப்பதாகவும், பற்களாலும் நகங்களாலும் அதை எதிர்த்துப் போரிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அமெரிக்க எதிர்ப்பு அணியில் உள்ள சீனா, ரஸ்யா, கியூபா, வெலிசுவேலா, லிபியா, ஈரான், சிரியா போன்ற நாடுகளுடன் கடந்த பல ஆண்டுகளாக கொண்டுள்ள உறவுகள் குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருந்தது என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to அமெரிக்காவுக்கெதிரான போராட்டங்கள் குறித்து, அமெரிக்கா தீவிர கண்காணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com