Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தின் மீது இந்தியா தமிழர்களின் நலனை மனதில் கொண்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

இத்தீர்மானம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் ஒருமித்த கருத்தையே வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த நாராயணசாமி, தானும், அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்து இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது, தமிழ் நாட்டின் உணர்வுகளை மனதில் கொண்டு , இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

அதே போல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தான் நேரில் சந்தித்து இதே நிலைப்பாட்டை வலியுறுத்தியதாகவும், பிரதமரும் அதைப் பரிவுடன் கவனிப்பதாகக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தில் இந்திய அரசு திறந்தமனதுடன் இருப்பதாகவும், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை மீது பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் இந்திய அரசு, போருக்கு பின்னர்,இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் விஷயத்திலோ அல்லது, போரினால் ஏற்பட்ட மனித நேயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விஷயத்திலோ, இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை என்ற விமர்சனங்களை அமைச்சர் நாராயணசாமி மறுத்தார்.

இலங்கை அரசு ஒரு சுதந்திரமான நாடு, அதன் உள்விவகாரங்களில் ஒரு வரம்புக்குள்ளேயே இந்தியா தலையிட முடியும். தீர்வு காணுங்கள் என்று வலியுறுத்தலாமே தவிர வற்புறுத்தமுடியாது என்றார். ஆனால் மனித நேயப் பிரச்சினைகளில் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

சூரியனில் ஏற்பட்டுள்ள கடுமையான புயலின் தாக்கம் காரணமாக பீறிட்டு வெளியேறும் மோசமான வெப்ப அலைக்கற்றைகள் நாளை பகல் 07.00 – 10.00 மணிக்குள் புவி மீது தாக்குதலை நடாத்தும். இதன் காரணமாக பறக்கும் விமானங்கள், மின்சார வழங்கல், சற்லைற் தொடர்பாடல் போன்றவற்றில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. டென்மார்க்கில் இதன் தாக்கம் நாளை வெள்ளி இருக்கும் என்றும் பொலிற்றிக்கன் எழுதியுள்ளது.

2012 ம் ஆண்டில் யார் உலகப் பெரும் பணக்காரர் என்பதை அட்டவணையிடும் உலகப்பணக்காரர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் பத்து இடங்களை பிடித்தோர் விபரம் சென்ற வருட வருமானமும் வருமாறு :

01. கார்லோஸ் சிலிம் – மெக்சிக்கோ ரொலிகொம் – 69 பில்லியன் டாலர்
02. பில்கேய்ட்ஸ் – அமெரிக்கா – மக்கிரோ சொப்ற் – 61 பில்லியன் டாலர்.
03. வாரன் புபேற் – அமெரிக்கா – பங்கு சந்தை – 44 பில்லியன் டாலர்
04. பாரன் அர்னலுற் – பிரான்ஸ் – எல்.வி.எச்.எம் – 41 பில்லியன் டாலர்
05. அமன்சியோ – ஸ்பானியா – ஒர்டேகா ஸீரா – 37.5 பில்லியன் டாலர்
06. லரி எலிசன் – அமெரிக்கா – ட்ராகிள் – 36 பில்லியன் டாலர்
07. ஈகா பற்றிஸ்ரா – பிரேசில் – ஓயில் – காஸ் – 30 பில்லியன் டாலர்
08. ஸ்ரெபன் பேர்சன் – சுவீடன் – எச் அன் எம் – 25.5 பில்லியன் டாலர்
09. லீ கா ஷாங் – கொங்கொங் – டிவேர்ஸ் – 24.5 பில்லியன் டாலர்
10. கார்ள் – யேர்மனி – அல்டி மாக்கற் – 25.4 பில்லியன் டாலர்

சுவீடிஸ் பிரதமர் பிரட்றிக் – பிலிப்பா றெயின்பல்ட் தம்பதியர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். மேற்படி தகவலை பிரதமரின் செயலாளர் றொபேட்டா அலினியஸ் தெரிவித்தார். இவர்கள் கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் வாங்கிய வீடும் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இவர்களுடைய பிளவு தொடருமானால் சுவீடிஸ் சட்டப்படி விவாகரத்து வழங்கப்படும். இவர்களுக்கு 18 வயது – 16 வயது – 11 வயதில் மூன்று பிள்ளைகள் உண்டு. விவாகரத்திற்கான காரணங்கள் கிடைக்கவில்லை.

அலைகள்

0 Responses to இந்தியாவின் போக்கில் மெல்லிய மாற்றம் தெரிகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com