Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில், அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றை வலியுறுத்தும் வகையிலான காத்திரமான உள்ளடக்கத்தை, ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைபில் எதிர்பார்ப்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து, கருத்து தெரிவித்த போது இக்கூற்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர்கருத்து தெரிவிக்கையில்

அமெரிக்காவினால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபை, அங்கத்துவ நாடுகளால் பலப்படுத்தவும் முடியும். பலவீனப்படுத்தவும் முடியும்.

சிறிலங்கா அரசானது, இந்தத் தீர்மான வரைபைப் பலவீனப்படுத்தி, தோல்வியுறச் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கும்.

இந்தநிலையில், தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்ற, சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் தீர்மான வரைபில் காத்திரமான உள்ளடக்கத்தையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதேவேளை, இத்தகைய விவகாரங்களில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு இருக்கின்ற பொறுப்புள்ள கடப்பாட்டினை, இந்த தீருமானம் தொடர்பாக பேரவை பொறுப்புடன் ஆற்றும் என்றும் நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அமெரிக்காவின் பிரேரணை குறித்து வி.உருத்திரகுமாரன் கருத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com