Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்கா முன்வைத்த பிரேரணையினை குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெளிவு படுத்துவதற்காக ஜெனீவா சென்ற இலங்கை குழுவினர் இன்று சனிக்கிழமை காலை வெறுங்கையுடன் நாடு திரும்பியுள்ளனர்.

அந்த வகையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா உட்பட பல அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் ஜெனீவா சென்றிருந்தனர்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த பிரேரணையை முறியடிப்பதற்காக நாடளாவிய ரீதியிலும் சர்வதேசத்திலும் பல செயற்பாடுகளை மேற்கொண்ட இலங்கை, அவை அனைத்தும் அவசியமற்றதாகி போய்விட பிரதிநிதிகள் அனைவரும் தோல்வியடைந்த நிலையில் வெறுங்கையுடன் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை அரசானது எவ்வாறான பிரயத்தனத்தை மேற்கொண்டாவது அமெரிக்காவின் பிடியில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாடளாவிய ரீதியில் தமது ஆதரவாளர்களை கொண்டு மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள்.

அது மட்டுமல்ல இங்கிருந்து ஒரு படையினையே அனுப்பி சர்வதேசத்தினை தம்பக்கம் திசை திருப்ப பல முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கான செயற்பாட்டினை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மும்முரமாக மேற்கொண்டிருந்தார்.

இலங்கை அரசின் நம்பிக்கைகள் அனைத்தும் கைகொடுக்காது தவிடுபொடி ஆகிவிட்டது. இருப்பினும் 24 நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவளித்தாலும் தமக்காக இந்த சிறிய நாட்டிற்காக 15 நாடுகள் ஆதரவளித்தமை தமக்கு கிடைத்த பெரு வெற்றியாகும் என மார் தட்டிக் கொள்கின்றது அரசு.

0 Responses to இலங்கைப் பட்டாளங்கள் வெறுங்கையுடன் நாடு திரும்பியுள்ளன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com