Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின் அமைச்சர்களுடனோ, உயர்மட்ட அதிகாரிகளுடனோ நேரடிப்பேச்சு நடத்துவதை முதல்வர் விரும்பவில்லை” என்று தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்தார்.

“ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்தும், அது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் பற்றியும் விளக்கி அம்மா (ஜெயலலிதா) இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகனுக்கு அனுப்பினார். அந்த இரண்டு கடிதங்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படவில்லை. அவற்றை கிஞ்சித்தும் மத்திய அரசு கவனிக்கவில்லை. இந்த நிலையில், அதிகாரிகளைச் சந்திப்பது அர்த்தமற்ற செயல். இதனால்தான் மேனனின் கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சரின் இந்த நிராகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, மூத்த அமைச்சர் ஒருவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக அறியமுடிகின்றது.

0 Responses to தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்த உருப்படியான வேலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com