Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தனது ரிஷிவந்தியம் தொகுதியில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 80 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ’’சட்டப்பேரவைக்கு சில எம்எல்ஏக்கள் அம்மா, தாயே என துதிபாடுவதற்காகவே வருகின்றனர். அவர்களுக்குத்தான் பேசுவதற்கும் வாய்ப்பும் அளிக்கின்றனர்.

தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது கரண்ட் இல்லை, தண்ணீர் இல்லை என்கிறார்கள். கேட்பதற்கே ரொம்பகஷ்டமாயிருக்கு. மின்சார பற்றாக்குறைக்கு திமுக,அதிமுகதான் காரணம்.

மக்கள் குறைகளை பேசத்தான் சட்டமன்றம் இருக்கு. ஆனா அங்கு பேச அனுமதி தரமறுக்கிறார்கள்.

என்னை அடக்க நினைத்தால் அழிந்து போவார்கள்’’ என்று கூறினார்.

முன்னதாக விஜயகாந்த், எம்.எல்.ஏ. நிதியில் பாசாறு என்ற இடத்தில் கட்டப்பட்ட சிமெண்ட் சாலையை பார்வையிட்டார்.

மேலத்தேனூரில் கட்டப்பட்ட சிறு பாலத்தை பார்வையிட்டார். ஜி.அரியூரில் பள்ளிக்கட்டிடம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கினார். பின்னர் திருக்கோவிலூர் பயணியர் விடுதியில் அரசு அதிகாரிகளூடன் தொகுதி மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

0 Responses to கேட்பதற்கே ரொம்ப கஷ்டமாயிருக்கு: சொந்த தொகுதியில் விஜயகாந்த் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com